உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI), கூகிள் நிறுவனத்தின் வெப் பிரசவுரான குரோம் (Chrome) வாங்க ஆர்வமா இருக்கோம்ன்னு தெரிவித்து டெக் உலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது சாம் ஆல்ட்மேனின் நிறுவனம். திடிரென Chrome தளத்தை விலைக்கு கேட்க என்ன காரணம்..?
கூகுள் நிறுவனத்தை லேரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோர் தலைமையேற்று நிர்வாகம் செய்து வந்த போது முக்கிய ஊழியராக இருந்த சுந்தர் பிச்சை உயர்மட்ட நிர்வாகத்திற்கு தெரியமல் ரகசியமாக சில மூத்த இன்ஜினியர்களுடன் இணைந்து உருவாக்கியது தான் இந்த க்ரோம் பிரவுசர். இந்த க்ரோம் பிரவுசர் தான் தற்போது விளம்பர வருவாய், சர்ச் என மொத்த சாம்ராஜ்ஜியத்திற்கும் நிதி ஆதாரத்தை அளிக்கிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றத்தில் நடந்து வரும் கூகிள் மீதான உரிமை மீறல் வழக்கு (Antitrust Trial) விசாரணை தற்போது முக்கிய திருப்பத்தை எதிர்கொண்டு உள்ளது. கூகுள் ஆன்லைன் சர்ச் பிரிவில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கூகிள் நிறுவனத்தின் ஆதிக்கத்தால் பிற நிறுவனங்கள் இப்பிரிவில் வளர முடியாமல் இருப்பது மட்டும் அல்லாமல் சர்ச் சேவையை நம்பியிருக்கும் பல தரப்பட்ட சேவை பிரிவும் இதன் மூலம் மாட்டிக்கொண்டு உள்ளது என டெக் நிறுவனங்கள் குற்றம்சாட்டி வருகிறது.
இதனால் பல டெக் நிறுவனங்கள் இணைந்து தொடுத்த வழக்கில் கூகிள் தற்போது மாட்டிக்கொண்டு இருக்கிறது. சரி கூகுள்-க்கும், ChatGPT உருவாக்கிய ஓபன்ஏஐ-க்கு என்ன பஞ்சாயத்து..?
ChatGPT சேவை வெப் சர்ச் வாயிலாகவே செயல்படும் காரணத்தால், இந்நிறுவனம் தனது ஆரம்பக்கட்டத்தில் வளர முடியாமல் மாடிக்கொண்டு தவித்தது. அப்போது ஓபன்ஏஐ தரப்பில் இருந்து கூகிளின் சர்ச் டேட்டா வேண்டும் என கோரிக்கை விடுத்தது, இதை கூகிள் நிராகரித்துவிட்டு சொந்தமாக ஜெமினி ஏஐ தளத்தை உருவாக்கி அறிமுகம் செய்தது.
இந்த விவகாரம் தான் தற்போது நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதோடு கூகிளின் சர்ச் பிரிவு ஆதிக்கும் ஒரு நிறுவனத்தை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதையும் காட்டியுள்ளது. இதனால் இந்த வழக்கின் தீர்ப்பு கூகுள்-க்கு எதிராக மாறவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
ஓபன்ஏஐ நிறுவனத்தின் ப்ராடெக்ட் பிரிவு தலைவர் நிக் டர்லி (Nick Turley) இந்த விவகாரம் குறித்து கூகிள் மீதான உரிமை மீறல் வழக்கில் சாட்சி அளித்தார். இதை தொடர்ந்து அமெரிக்க நீதித்துறை (DOJ), ஆன்லைன் சர்ச் சந்தையில் கூகிளின் ஆதிக்கத்தை உடைக்க, குரோம் ப்ரவுசரை விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், ஓபன்ஏஐ அதை வாங்க ஆர்வமா இருக்கிறது என டர்லி தெரிவித்துள்ளார். இதுதான் டெக் உலகின் தற்போதையை முக்கிய விவாத பொருளாக உருவெடுத்துள்ளது.
கூகிள் மீதான வழக்கு: என்ன நடக்குது?
அமெரிக்க நீதித்துறை, கூகிளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் மீது ஆன்லைன் சர்ச் சந்தையில் மோனோபோலியாக உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மிகப்பெரிய வழக்கை தொடுத்தது. கடந்த ஆண்டு, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கூகிள் ஆன்லைன் சர்ச் மற்றும் அதோடு தொடர்புடைய விளம்பர சந்தையில் மோனோபோலியாக ஆதிக்கம் செலுத்துகிறது என தீர்ப்பு வழங்கினார்.
இதனால், கூகிள் தன்னோட ஆதிக்கத்தை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு ஆன்லைன் சர்ச் சந்தையில் தனது மோனோபோலி தன்மையை உடைக்க குரோம்-ஐ விற்க வேண்டும் என்ற நிலையில் மாட்டிக்கொண்டது. ஆனால் கூகிள் இந்த தீர்ப்பை ஏற்கவில்லை. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
கூகிளின் குரோம் பிரவுசரை ஓபன்ஏஐ வாங்க ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது..?
ஓபன்ஏஐ-யோட முக்கிய தயாரிப்பான சாட்ஜிபிடி, ஒரு முன்னணி ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் என்பது எல்லோருக்கும் தெரியும். இது, மக்களுக்கு பலவிதமான தகவல்களை வழங்க, சர்ச் தொழில்நுட்பத்தையே அடிப்படையாக நம்பியிருக்கு. கூகுள் தனது தகவலை பகிர விரும்பாத நிலையில் தற்போது மைக்ரோசாஃப்ட் பிங் (Bing) சர்ச் தளத்தை பயன்படுத்தி இயங்கி வருகிறது.
இதுக்கு முன் ஓபன்ஏஐ தன்னோட சொந்த சர்ச் தளத்தை பயன்படுத்தியபோது சில பிரச்சினைகளை வந்தது, அப்போது தான் கூகுள்-ன் டேட்டா-வை கேட்டு டீலிங் பேசியது ஓபன்ஏஐ நிறுவனம்.
ஓபன்ஏஐ 2024 ஜூலை மாதம் கூகிளை அணுகி, சாட்ஜிபிடியில் கூகிளோட சர்ச் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தது. ஆனால், ஆகஸ்ட் மாதமே கூகிள் இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதை நிக் டர்லி இந்த வாரம் திங்கட்கிழமை நடந்த வழக்கு விசாரணையில் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க நீதித்துறை, கூகிளின் ஆதிக்கத்தை உடைக்க, ஒரு முக்கிய பரிந்துரையை முன்வைத்தது, அதாவது கூகிள் தன்னுடைய சர்ச் தரவுகளை (Search Data) மற்ற போட்டி நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கோரியிருந்தது.இது, ஆன்லைன் சர்ச் சந்தையில் சரியான போட்டிதன்மையை மீட்டெடுக்க உதவும் என்று நீதித்துறை நம்புகிறது.
இந்த பரிந்துரையை பற்றி பேசிய டர்லி, "கூகிள் தன்னோட சர்ச் தரவுகளை பகிர்ந்தால், சாட்ஜிபிடியோட திறனை மேம்படுத்துறதுக்கு இது பெரிய அளவில் உதவும். எங்களோட முயற்சிகள் வேகமாக முன்னேறும்," என்று குறிப்பிட்டார். இது, ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.
ஆனால் கூகுள் தரப்பில் ஏஐ பிரிவில் தங்களுக்கு அதிகப்படியான போட்டி இருப்பதாகவும், தற்போது எங்களுடைய தரவுகளை பகிர்ந்தால், எங்களுடைய டேட்டா செட்-ஐ வைத்து பிற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் என திங்கட்கிழமை நடந்த விசாரணையில் தெரிவித்தது.
More From GoodReturns

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications