செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனமான ஓபன் ஏஐ, புதிதாக ChatGPT Wallet என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நம்முடைய ஷாப்பிங் அனுபவங்களையே முற்றிலும் மாற்றி அமைப்பதாக உள்ளது. ChatGPT Wallet என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? என்பதை பார்க்கலாம்.
தற்போது நாம் நமக்கு தேவையான பொருட்களை தேடவோ அல்லது ஹோட்டல் அறைகளை பதிவு செய்யவோ ChatGPT-ஐ பயன்படுத்துகிறோம். அதன் பின்னர் அதில் வரும் லிங்குகளை ஆய்வு செய்து நாம் தேவையான பொருட்களை வாங்கி கொள்கிறோம். ஆனால் இனி அந்த வேலைகலையும் சாட் ஜிபிடிடே முடித்து விடும். அதாவது ஏஐ வெறும் ஷாப்பிங் லிங்குகளை மட்டும் தராமல் அதற்கு கட்டணமும் செலுத்தி அந்த ஷாப்பிங்கையே முடித்து கொடுக்கும்.

இதற்காக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் , மாஸ்டர்கார்டு மற்றும் விசா போன்ற முன்னணி நிறுவனங்களுடன் ஓபன் ஏஐ கைகோர்த்துள்ளது. பயனர்கள் தங்களது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை ChatGPT Wallet-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது முழுக்க முழுக்க பாதுகாப்பாக இருக்கும் என ஓபன் ஏஐ கூறுகிறது.
இதனை அடுத்து நீங்கள் ஒரு ஷூ வாங்க விரும்புகிறீர்கள் என்றால் சாட் ஜிபிடியின் ஏஐ ஏஜெண்டான Dot -இடம் , என்னுடைய ஷூ சைஸ் இது, எனக்கு அடிடாஸில் இந்த நிறத்தில் ஷூ வேண்டும் என கூறினால் போதும். சாட் ஜிபிடி அந்த ஷூவை கண்டுபிடித்து வாலெட்டில் இணைத்துள்ள கார்டில் இருந்து பணத்தையும் செலுத்திவிடும்.
இந்த முறையில், AI ஏஜெண்டுகளுக்கோ அல்லது வியாபாரிகளுக்கோ பயனர்களின் உண்மையான கார்டு விவரங்கள் எப்போதுமே தெரியாது. அதற்கு பதிலாக, அந்த குறிப்பிட்ட பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படும் வகையில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய Payment Token அதாவது ஒரு தனித்துவமான தற்காலிக எண், காலாவதி தேதி மற்றும் பாதுகாப்பு குறியீடு வழங்கப்படுகிறது என சாட் ஜிபிடி கூறுகிறது.
ஏஐ ஏஜெண்டுகளுக்கு ஷாப்பிங் செய்யும் முழு சுதந்திரம் வழங்கப்பட்டாலும், இறுதியாக பணத்தை செலுத்தும் ஒப்புதலை மனிதர்களாகிய நாம் தான் தர வேண்டும். வாடிக்கையாளர்கள் இறுதி ஒப்புதல் அளிக்க Face ID அல்லது Touch ID போன்ற பயோமெட்ரிக் தரவுகளை தர வேண்டி இருக்கும், அதன் பின்னரே பணம் செலுத்தப்படும். பயனர்கள் விரும்பவில்லை என்றால் எந்த நேரத்திலும் கட்டணத்தை ரத்து செய்யலாம்.
இதில் வசதி என்னவென்றால் ஒரு இணையதளம் சென்று நமக்கான பொருளை தேடி கார்ட்டில் சேர்த்து முகவரி கொடுத்து பணம் செலுத்த வேண்டிய அலைச்சல் இல்லை. சாட் ஜிபிடியே இந்த வேலையை முடிக்கும் பண பரிவர்த்தனையின் போது மட்டுமே நாம் இறுதி ஒப்புதல் தந்தால் போதும்.
இந்த புதிய வசதியானது முதலில் அமெரிக்காவில் உள்ள ChatGPT Pro சந்தாதாரர்களுக்கு மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பயனர்கள் தங்கள் மொபைல் செயலி அல்லது கணினிகள் மூலமாக செட்டிங்ஸ் பகுதியில் உள்ள Wallet பக்கத்திற்கு சென்று கார்டை இணைக்கலாம்.


Click it and Unblock the Notifications

