மனிதனின் அறிவுத்திறனில் உருவாகியிருக்கும் இந்தச் செயற்கை நுண்ணறிவு எனும் தொழில்நுட்பம்தான் இனி உலகை ஆளப்போகிறது! தொலைகாட்சி, கைப்பேசி, கணினி என எல்லா இடங்களிலும் இந்த AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்குநாள் வளர்ச்சியடைவதை நாம் பார்க்க முடிகிறது. மனிதனின் மூளையைப் பயன்படுத்தி செய்யப்படும் வேலைகள் அனைத்தையும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக்கொண்டு மிக எளிதாக விரைவில் செய்ய முடிகிறது. அதனால் பல துறைகளில் இந்த AI பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இப்படியிருக்கையில், நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக AIஆகி விட்டது. எனவே AI ஆராய்ச்சியில் நிறைய பணத்தை அனைத்து நாடுகளும் முதலீடு செய்கின்றன. AI தொழில்நுட்பத்தில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேதான் போட்டி உள்ளது. இதில், சீனாவின் DEEP SEEK கடந்த சில வாரங்களில் ,அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்துள்ளது. தற்போதைய நிலையில் ஏஐ துறையின் முன்னேற்றத்தில் உலகளவில் இந்தியா 4ஆம் இடத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்தநிலையில், நாட்டில் தங்கள் செயற்கை நுண்ணறிவு சலுகைகளை விரிவுபடுத்தும் நோக்கில், உலகளாவிய ஏஐ முன்னோடியான OpenAI மற்றும் Meta நிறுவனங்கள், ரிலையன்ஸ் உடன் ஏஐ தொடர்பான கூட்டாண்மைக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நேற்று The Information வெளியிட்ட தகவலின்படி, OpenAI மற்றும் மெட்டா, இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்தியாவில் தங்களது செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், இந்த கூட்டாண்மை அமையக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிக்கையின்படி, OpenAI, தனது ChatGPT சந்தா கட்டணத்தை 20 டாலர் என்ற மாத சந்தாவிலிருந்து சில டாலர்கள் வரை குறைக்கும் வாய்ப்பை தனது ஊழியர்களுடன் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விலைக் குறைப்பை ரிலையன்ஸுடன் ஓப்பன்ஏஐ கலந்துரையாடியதா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரிலையன்ஸ் நிறுவனம், OpenAI-யின் AI மாதிரிகளை தனது வணிக வாடிக்கையாளர்களுக்கு API (Application Programming Interface) மூலம் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அத்துடன், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், இந்தியாவின் உள்ளூர் பயனர் தரவுகளை நாட்டிற்குள் பாதுகாக்க, ஓப்பன்ஏஐ மாதிரிகளை உள்ளூரிலேயே ஹோஸ்ட் செய்து இயக்கும் வாய்ப்பை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குஜராத்தின் ஜாம்நகர் நகரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தரவு மையம் என்று கூறியுள்ள மூன்று ஜிகாவாட் தரவு மையத்தை உருவாக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் மெட்டா மற்றும் ஓபன்ஏஐ மாடல்களை இயக்குவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், The Information வெளியிட்ட அறிக்கை குறித்து, மெட்டா நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதேபோல், OpenAI மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் உடனடியாக பதிலளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications