இனி எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தான் என்ற நிலை அடைந்துவிட்ட நிலையில், இதில் யார் அதிகம் ஆதிக்கம் செலுத்த போகிறார்கள் என்பதில் தான் இப்போது பெரும் போட்டியே நடக்கிறது. இன்றைய தேதிக்கு AI துறையில் பெரும் நிறுவனம் என்றால் அது சேட்ஜிபிடி உருவாக்கிய OpenAI நிறுவனம் தான்.
OpenAI நிறுவனத்தின் நிர்வாக குழுவில் கடந்த 8 மாதங்களாக புகைந்து வந்த விஷயம் தற்போது வெடித்துள்ளது, OpenAI நிறுவனத்தின் இணை நிறுவனரான சாம் ஆல்ட்மேன் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து நிர்வாகத்திற்கு தெரியமான பல வேலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றபட்டார்.

வெளியேற்றப்பட்ட அடுத்த சில நாளில் மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா, நிறுவனத்தின் புதிய மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சி அணியில் தலைவகராக OpenAI நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சாம் ஆல்ட்மேன் மற்றும் Greg Brockman ஆகியோரை நியமித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதே வேளையில் OpenAI நிறுவனத்தில் முக்கியமான மாற்றம் நடந்துள்ளது.
OpenAI நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சாம் ஆல்ட்மேனை மீண்டும் பணியில் அமர்த்துமாறு முதலீட்டாளர்கள் அதன் நிர்வாக குழுவிற்கு அழைப்பு விடுத்த போதிலும், OpenAI நிர்வாக குழு Twitch நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ Emmett Shear ஐ புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
சாம் ஆல்ட்மேன் வெளியேற்றத்திற்கு பின்பு அல்பேனியன் நாட்டை சேர்ந்த மிரா முராட்டி தற்காலிக CEO ஆகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில் ஓபன்ஏஐ நிர்வாகம் நிரந்தர சிஇஓ-வாக Twitch நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ Emmett Shear நியமித்துள்ளது. இதன் மூலம் மிரா முராட்டி தனது தற்காலிக CEO பதவியை இழக்க உள்ளார், OpenAI நிறுவனத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது CEO மாற்றப்பட்டு உள்ளது.

1983 இல் பிறந்த Emmett Shear, யேல் பல்கலைக்கழகத்தில் 2005 இல் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இந்த ஆண்டு பிப்ரவரி வரை, Amazon.com இன் கேமிங் ஸ்ட்ரீமிங் தளமான Twitch இன் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்.


Click it and Unblock the Notifications