செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முன்னணி நிறுவனமான OpenAI, 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது பணியாளர்களை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 4,500 பணியாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்த ஆண்டு இறுதியில் 8,000 பணியாளர்களை எட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஏஐ துறையில் பெரும் ஒப்பந்தங்களை பெற்று வரும் OpenAI நிறுவனம் (அமெரிக்க பாதுக்காப்பு துறை ஒப்பந்தம் உட்பட) தனது சேவை தளத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும் ஜெமினி, கிளாட் போன்றவற்றுக்கு போட்டியாக தனது தளத்தை மக்கள் மத்தியில் நிறுத்தவும் மெகா திட்டத்தை தீட்டியுள்ளது.

இதன் அடிப்படையில் 2 முக்கிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதில் முதலாவதாக ஊழியர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது. தற்போது OpenAI திட்டமிட்டுள்ள 3500 புதிய பணியாளர்களில் பெரும்பாலானோர் தயாரிப்பு மேம்பாடு (product development), பொறியியல் (engineering), ஆராய்ச்சி (research) மற்றும் விற்பனை (sales) துறைகளில் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும், OpenAI தனது சேவைகளை நிறுவனங்கள் சிறப்பாக பயன்படுத்த உதவும் "தொழில்நுட்ப தூதரகம்" (technical ambassadorship) என்ற சிறப்பு பிரிவுக்காக நிபுணர்களை தீவிரமாக தேர்வு செய்து வருகிறது. இது நிறுவனத்தின் வணிக விரிவாக்கத்திற்கு முக்கியமான நடவடிக்கையாகும்.
சூப்பர் ஆப் அறிமுகம்
OpenAI தனது ChatGPT செயலியை, Codex கோடிங் தளம் மற்றும் பிரவுசரை ஒரே டெஸ்க்டாப் "சூப்பர் ஆப்" ஆக ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது. இது பயனர்களுக்கு எளிமையான அனுபவத்தை வழங்கும். இந்த பெரிய மாற்றத்தை OpenAI தலைவர் Greg Brockman தற்காலிகமாக கவனிப்பார்.
அப்பிளிகேஷன் தலைவர் Fidji Simo விற்பனை குழுவை வழிநடத்துவார். இந்த ஒருங்கிணைப்பு தளங்களை திறம்பட பயன்படுத்தி, Anthropic போன்ற போட்டியாளர்களை எதிர்கொள்ள உதவும் என்று நிறுவனம் நம்புகிறது.
போட்டி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் Google-இன் Gemini 3.0 மாடலுக்கு எதிராக OpenAI CEO Sam Altman உள் "கோட் ரெட்" அறிவிப்பை வெளியிட்டார். இதனால் நிறுவனத்தில் முக்கியம் அல்லாத திட்டங்கள் நிறுத்தப்பட்டு, அனைத்து குழுக்களும் விரைவான மேம்பாட்டிற்கு திருப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது
மதிப்பீடு
OpenAI சமீபத்தில் 110 பில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்டியது. இந்த முதலீட்டு திரட்டும் சுற்றில் இந்நிறுவனத்தின் மதிப்பீடு 840 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமேசான், சாஃப்ட்பேங்க், என்விடியா போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த சுற்றில் முதலீடு செய்துள்ளன. இது AI துறையில் நடந்த மிகப்பெரிய நிதி திரட்டல்களில் ஒன்றாகும்.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!



Click it and Unblock the Notifications