மீண்டும் கிங்மேக்கர் ஆன OpenAI.. புதிதாக களமிறக்கப்பட்ட GPT-6 Astra.. AGI தொழில்நுட்ப யுகத்தின் துவக்கம் இது!

ஏஐ போட்டியில் தற்போது அமெரிக்க நிறுவனங்கள் தாண்டி சீனா நிறுவனங்களும் வந்துள்ள நிலையில் ஓப்பன் ஏஐ உருவாக்கிய ஏஐ மாடல்களின் திறன் மற்ற மாடல்களை காட்டிலும் மிகவும் குறைவாக இருந்ததால் பின்தங்கியது.

இதனால் ஏஐ தொழில்நுட்பத்தை சாமானிய மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றி புரட்சி செய்த ஓப்பன் ஏஐ ஆந்திரோபிக், ஜெமினி போன்ற நிறுவனத்தால் ஆதிக்கத்தை இழந்தது. இந்த நிலையில் மீண்டும் ரேசில் குதிக்க ஓப்பன் ஏஐ நிறுவனம் GPT-6 Astra என்ற புதிய மாடவை அறிமுகம் செய்து மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

 மீண்டும் கிங்மேக்கர் ஆன OpenAI.. புதிதாக களமிறக்கப்பட்ட GPT-6 Astra.. AGI தொழில்நுட்ப யுகத்தின் துவக்கம் இது!

இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் சமீபத்தில் உலக நாடுகளை வியக்க வைத்த ஆந்திரோபிக் நிறுவனத்தின் Fable 5.1 மற்றும் மைதோஸ் 5.1 ஏஐ மாடல்களை காட்டில் சிறப்பான திறன்களை கொண்டுள்ளதாக ஆய்வின் முடிவுகளும் பென்ச்மார்க் கணக்கீடில் அதிகப்படியான மதிப்பீட்டை பெற்றுள்ளது.

உதாரணமாக GPT-6 Astra ஏஐ மாடல் FrontierMath Tier 4 பிரிவில் 98 சதவீத மதிப்பெண்களையும், ExploitBench-ல் 100 சதவீத மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. மேலும் நிஜ உலகில், ஒருவர் வேலை தேடும் பணியை 5 மணிநேரத்தில் செய்ய முடியம் என்றால் GPT-6 Astra ஏஐ மாடல் 2.51 நிமிடத்தில் செய்து முடிக்கிறது.

ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் க்ரெக் பிராக்மேன் கூறுகையில் GPT-6 Astra ஏஐ மாடல் தான் Artificial General Intelligence (AGI) யுகத்தின் துவக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இது தான் தற்போது ஒட்டுமொத்த டெக் துறையில் விவாத பொருளாக உள்ளது, AGI என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உச்சமாக பார்க்கப்படும் வேளையில் Astra ஏஐ மாடல் AGI-யின் துவக்கம் என கூறியது மிக முக்கியமான கருத்தாக உள்ளது.

மேலும் ஆந்திரோபிக் நிறுவனத்தின் Fable 5.1 மற்றும் மைதோஸ் 5.1 ஏஐ மாடல்களில் இருப்பது போலவே Astra ஏஐ மாடலும் சைபர் செக்யூரிட்டியை உடைக்கும் திறன் கொண்டதாக இருக்கும் காரணத்தால் கூடுதல் அச்சம் உருவாகியுள்ளது.

கடந்த மாதம் ஓப்பன்ஏஐ நிறுவனம் மிகப்பெரிய சைபர் அச்சம் இருப்பதாக கூறி தனது ஏஐ மாடலுக்கான டிரைனிங்-ஐ நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது அஸ்திரா மாடலுக்கு சைபர்செக்யூரிட்டியில் critical level திறன் உள்ளதாக தெரிவித்துள்ளது ஓப்பன்ஏஐ.

இதனால் இந்த மாடலை மக்களுக்கு மிகவும் கட்டுப்பாடான முறையில் மட்டுமே பயன்பாட்டுக்கு அளிக்க திட்டமிட்டு உள்ளது, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆஸ்திரா-வுக்கான ஆக்சஸ் வழங்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+