தொழில்நுட்ப உலகில் தினசரி அடிப்படையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் ஐடி நிறுவனங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தத் தொழில்நுட்பத்தை பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகிறது. அதில் ஓபன் AI முன்னணி வகிக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் ஒரு ஏஐ கருவியைக் கண்டுபிடித்துள்ளது. அதன் பெயர் "கோடெக்ஸ்". இதன் மூலம் சாப்ட்வேர் இன்ஜினியர்கள், கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதுபவர்கள் எளிதாக கோடிங் எழுதலாம்.
இந்த கோடெக்ஸ் தொழில்நுட்பம் மே 16-ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சாட் ஜிபிடி ப்ரோ, என்டர்பிரைஸ், மற்றும் டீம் சப்ஸ்கிரைபர்களுக்கு இந்த வசதி கிடைக்கும். இது கிளவுட் மூலம் இயங்குகிறது. சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு கோடிங் எழுதுவதற்கு, பக் இருந்தால் அதை சரி செய்வதற்கு என அனைத்திற்கும் சக ஊழியராக செயல்பட்டு மின்னல் வேகத்தில் இந்த AI செய்து முடிக்கும்.

ஓபன் AI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன், தனது அதிகாரப்பூர்வ X பதிவில், இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து எழுதியிருந்தார். "இன்று நாங்கள் கோடெக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது கிளவுட் மூலம் இயங்கக்கூடிய சாப்ட்வேர் இன்ஜினியர் ஏஜென்ட். இதன் மூலம் கோடிங் எழுதுவது, பிழைகளை சரி செய்வது போன்ற பணிகளை எளிதாகச் செய்யும், அதுவும் ஒரே நேரத்தில் செய்யும்", என்று பதிவிட்டிருந்தார்.
கோடெக்ஸ் ஒரு பைலை படித்து, அதில் திருத்தங்கள் இருந்தால் அதை செய்யும். டைப் செக்கராகவும் செயல்படும். கோடிங்கின் சிக்கல் தன்மையை பொறுத்து 30 நிமிடங்களுக்குள் நீங்கள் கேட்கும் கோடை எழுதித் தரும். பயனர்கள் ஒரே நேரத்தில் பல செஷன்களை பயன்படுத்தும் வசதியும் உள்ளது. இதனால் பல ஏஜெண்டுகளை ஒரே நேரத்தில் வேலை செய்ய வைக்க முடியும்.
கோடெக்ஸை எவ்வாறு பயன்படுத்துவது?:
ஸ்டெப் 1: நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது வேறு எந்த சாதனத்திலோ ChatGPT-ஐ திறந்தவுடன், திரையின் இடது பக்கத்தில் ஒரு சைடு பார் இருக்கும்.
ஸ்டெப் 2: கோடெக்ஸைப் பயன்படுத்தத் தயாரானதும், அதற்கு நீங்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
ஸ்டெப் 3: உதாரணமாக கோடிங் எழுத சொல்லலாம் அல்லது ஒரு டெக்ஸ்ட்டை கொடுத்து அதில் இருக்கும் பிழையை சரி செய்ய சொல்லலாம். நீங்கள் கோடெக்ஸிடம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தெளிவாக வழங்க வேண்டும். நீங்கள் சாட் ஜிபிடி-யிடம் கேட்பது போலவே இதிலும் கேட்கலாம். ஆனால் நீங்கள் கேட்பது தெளிவாகவும், என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது புரியும்படியும் இருக்க வேண்டும்.
ஸ்டெப் 4: கோடெக்ஸை பயன்படுத்தி கோடிங் எழுதச் சொன்னால், உடனடியாக இணைய இணைப்பு துண்டிக்கப்படும். இதன் முக்கிய காரணம் என்னவென்றால் கோடெக்ஸ் நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் இருந்து GitHub மூலம் கோடிங்கை எடுத்துக் காண்பிக்கும். கிட்ஹப் என்பது சாப்ட்வேர் இன்ஜினியர்கள், சாப்ட்வேர் டெவலப்பர்கள் கோடிங்கை சேமித்து வைக்கும் இடம். நீங்கள் கோடைக் கேட்டால் தகவல்களை GitHub மூலம் கோடெக்ஸ் தெரிந்துகொள்ளும்.
சில காலமாக சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கான கருவிகள் பிரபலமடையத் தொடங்கியுள்ளன. பிரபலமான ஐடி நிறுவனங்கள் இது போன்ற AI கருவிகளைத் தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. கோடிங் எழுதுவது பழமையான தொழிலாக மாறக்கூடும் என்ற கருத்தே நிலவி வருகிறது. கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் தங்கள் நிறுவனங்களின் கோடிங் சுமார் 30 சதவீதம் AI மூலம் எழுதப்படுகிறது எனக் கூறியுள்ளனர். இன்னும் பல மாற்றங்கள் AI கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்குள் சாப்ட்வேர் துறை இன்னும் மேம்படும். கோடிங் வேகம் அதிகரிக்கும், நம்பகத் தன்மையும் அதிகரிக்கக்கூடும் என்று கோடெக்ஸை உருவாக்கிய குழு கூறியுள்ளது
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications