பூதத்தை வெளியே விட தயாரான OpenAI.. 400 டாலர் விலையில் குட்டி விஷயம் வர போகுது!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான OpenAI, கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் வடிவமைப்பாளர் ஜானி ஐவ் உருவாக்கிய 'io' நிறுவனத்தை சுமார் 6.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது. சாம் ஆல்ட்மேன் ஏஐ பவர் கொண்ட கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை அறிமுகம் செய்வதற்காகவே io நிறுவனத்தை வாங்கினார்.

பலரும் ஸ்மார்ட்போன் தான் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஜானி ஐவ் கூட்டணி Dough Nut வடிவிலான ஒரு ஏஐ ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூதத்தை வெளியே விட தயாரான OpenAI.. 400 டாலர் விலையில் குட்டி விஷயம் வர போகுது!

இந்த ஸ்பீக்கரின் டிசைன் இணையத்தை கலக்கி வரும் வேளையில், இதன் விலை தற்போது தெரிய வந்துள்ளது. இந்த ஏஐ ஸ்பீக்கரில் எத்தகைய வசதிகள் இருக்கும், சந்தையில் இருக்கும் பிற சாட்பாட் ஸ்பீக்கர் போல தான் இருக்குமா என்பது குறித்த தகவல் முழுமையாக வெளியாகாத நிலையில் இக்கருவி சுமார் 300 - 400 டாலர் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்புதிய ஸ்பீக்கர் 2027ல் அறிமுகமாக உள்ளதாக தெரிகிறது.

சாம் ஆல்ட்மேன் மற்றும் ஜானி ஐவ் கூட்டணி திட்டமிட்டே தன்னுடைய புது ஸ்பீக்கரை சந்தையில் இருக்கும் அமேசான் அலெக்சா, கூகுள் நெஸ்ட் போன்றவற்றை காட்டிலு்ம அதிக விலை பட்டியலில் ப்ரீமியம் நிலையில் விற்க முடிவு செய்துள்ளது விளைவாகவே 300-400 டாலர் விலை பிரிவில் வருகிறது.

அமெரிக்க சந்தையில் தற்போது விற்கப்படும் ஸ்பீக்கர் பெரும்பாலும் 40- 240 டாலர் விலையில் தான் விற்கப்படுகிறது. இதனால் புதிய ஸ்பீக்கர் ப்ரீமியம் தரத்திலும் ப்ரீமியம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என திட்டமிட்டு அறிமுகம் செய்ய உள்ளது.

இப்புதிய ஸ்பீக்கர் அறிமுகத்தின் மூலம் சாட்ஜிபிடி மாடலுக்கு புதிய ஹார்வேர் கிடைக்க உள்ளது, இதேபோல் சாட்ஜிபிடி மாடல் புதிய வகையில் டிரைன் ஆக உள்ளது. இப்புதிய ஏஐ ஸ்பீக்கர் அமேசான் அலெக்சா, கூகுள் நெஸ்ட் போலவே வீட்டில் அனைவராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புதிய ஸ்பீக்கரின் வடிவமைப்பு பணிகளை ஜானி ஐவ்-வ் LoveFrom உருவாக்கியது, சாப்ட்வேர்-ஐ ஓப்பன்ஏஐ கொடுத்துள்ளது. ஆனால் இந்த ஸ்வீக்கரை யார மாஸ் ப்ரொடியூஸ் செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை.

பொதுவாக முன்னணி பிராண்டுகளின் கருவிகளை பாக்ஸ்கான் தயாரிக்கும் வேளையில் இப்புதிய ஸ்பீக்கருக்கான ஆர்டரை யார் பெற்றுள்ளார் என்பது தெரியவில்லை. மேலும் இதை அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+