சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரும்புவார் என்று இந்நிறுவனம் தனது டிவிட்டர் கணக்கில் புதன்கிழமை அதிகாலை 16 நிமிடங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் பழைய நிர்வாக குழு மொத்தமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டு புதிய நிர்வாக குழு நியமிக்கப்பட்டு உள்ளது
ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ திரும்ப அழைக்க சில வருடங்கள் ஆன நிலையில், OpenAI நிறுவனத்தின் 95 சதவீத ஊழியர்கள் சாம் ஆல்ட்மேன்-க்கு ஆதரவாக நின்று தாங்கள் ராஜினாமா செய்துவிடுவோம் என்ற மிரட்டி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியது.

இதனால் ஒரு வாரத்திற்குள் சாம் ஆல்ட்மேன் வெளியேற்றிய நிர்வாக குழுவை அவர் வெளியேற்றி மீண்டும் சிஇஓ-வாக நுழைந்துள்ளார். மேலும் புதிய நிர்வாக குழுவில் முன்னாள் சேல்ஸ்ஃபோர்ஸ் இணை தலைமை நிர்வாக அதிகாரி பிரட் டெய்லர் மற்றும் முன்னாள் அமெரிக்க கருவூல செயலாளர் லாரி சம்மர்ஸ் ஆகியோர் OpenAI இன் குழுவில் சேர உள்ளனர்.
ஏற்கனவே OpenAI நிர்வாக குழுவில் இருந்த Quora நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான Adam D'Angelo அப்பதவியில் தொடர்வார். மேலும் புதிய OpenAI நிர்வாக குழுவின் பணிகள், முக்கிய நிர்வாக மாற்றங்கள் ஆகியவற்றை குறித்து ஆவோசனை நடைபெற்று வருகிறது.
இதேபோன்ற சம்பவம் பேஸ்புக் நிறுவனத்தில் நடந்தது மறக்க முடியாது, பேஸ்புக் நிறுவனத்தை அமெரிக்க அரசு அதிகப்படியான நெருக்கடியை கொடுத்த நிலையில் அமெரிக்க கருவூலத்தில் பணியாற்றிய Sheryl Sandberg பேஸ்புக்-ன் சிஓஓ ஆக நியமிக்கப்பட்டார். இதன் பின்பு எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் பேஸ்புக் இயங்கியது.
சமீபத்தில் OpenAI நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து அமெரிக்காவில் அரசு சார்பாக சுந்தர் பிச்சை, சத்ய நாடெல்லா உட்பட பலர் கலந்துக்கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் சாம் ஆல்ட்மேன்-ம் கலந்துக்கொண்டார் அப்போது ஏஐ மூலம் சில பாதிப்புகள் இருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
சாம் ஆல்ட்மேனை வெளியேற்றியதற்கு முன்பு OpenAI நிறுவனத்தில் முக்கியமான மாற்றம் நடைபெற்றது, இதில் நிர்வாகம் எப்போது AGI எனப்படும் மனிதர்களுக்கு இணையாக தொழில்நுட்பம் இயங்கும் நிலையை அடையும் வரையில் மைக்ரோசாப்ட் அனைத்து சேவைகளையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம் என நிறுவன கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வந்தது. AGI - Artificial general intelligence.

இந்த ஒரு விஷயம் தான் அனைத்து பிரச்சனைக்கும் ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது. Artificial general intelligence மூலம் எந்த ஒரு பிரச்சனைக்கும் எளிதான தீர்வு காணும் அளவுக்கான திறன் கொண்ட AI தொழில்நுட்பம். இந்த நிலையை எட்டும் வரையில் அனைத்து சேவைகளையும், தொழில்நுட்பத்தையும் மைக்ரோசாப்ட் அதை வர்த்தகமாக்க முடியும்.
இதை சாம் ஆல்ட்மேன் - சத்ய நாடெல்லா டீம் இணைந்து செய்ய உள்ளது, ஏற்கனவே சாம் ஆல்ட்மேன் மைக்ரோசாப்ட் அணியில் முக்கிய பதவியில் இருக்கும் வேளையில் மீண்டும் openai நிறுவனத்தின் சிஇஓ-வாக மாறியிருக்கும் வேளையில் மொத்த ஆதிகாரம் பகிரப்படும். இது சாம் ஆல்ட்மேன் - சத்ய நாடெல்லா டீம்-க்கு தான் ஜாக்பாட்.
சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரும்புவது குறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட டிவீட். இதேபோல் கிரெக் பார்க்மேன்-ம் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு திரும்புகிறார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications