உலகளாவிய பிரவுசர் சந்தையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுள் குரோமுக்கு இதுவரையில் சீன நிறுவனங்களே போட்டியாக இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக அமெரிக்க நிறுவனங்கள் நேருக்கு நேர் போட்டிப்போட தயாராகியுள்ளது.
ஏஐ துறையில் பெரும் புரட்சி செய்து வரும் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புதிய பிரவுசர்-ஐ வெளியிடவுள்ளதாக மூன்று நம்பகமான ஆதாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன. இது கூகுளின் ஆதிக்கத்தை உடைப்பது மட்டும் அல்லாமல் கூகுளிடம் இருக்கும் சர்ச் டேட்டா இனி சொந்தமாக பெற உள்ளது.

இந்த பிரவுசர், வரும் வாரங்களில் அறிமுகமாக உள்ளதாகவும், மக்களின் பிரவுசிங் அனுபவத்தை மொத்தமாத மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த ஓபன்ஏஐ (OpenAI) முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கூகுளின் வர்த்தகம், விளம்பரம் மற்றும் நிதி ஆதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது இந்த கூகுள் குரோம் தான். தற்போது ஓபன்ஏஐ இத்துறையில் இறங்குவது மூலம் பிரவுசர் பிரிவில் ஆதிக்கத்தை இழப்பது மட்டும் அல்லாமல் வருவாயும் இழக்க நேரிடும்.
ஓபன்ஏஐ வெறும் சாட்பாட் ஆக இருக்க முடியாது என்பதை பல வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு உள்ளது. மக்களின் தினசரி வாழ்வில் முக்கியமான பங்காக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சாம் ஆல்ட்மேன் அடுத்தடுத்து மக்களின் பயன்பாட்டுக்கு உதவும் பல திட்டங்களை செயல்படுத்த உள்ளார். கன்ஸ்யூமர் என்ட் பிரிவில் சேவைகளையும், பொருட்களையும் உருவாக்கவே தனி டீம் உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
எதற்காக இந்த பிரவுசர் என்றால், மக்களின் தேடலுக்கு ஏற்ற கன்டென்ட் பரிந்துரை செய்யப்படுகிறதா என்பதே ஒரு தளத்தின் வெற்றிக்கு அடித்தளமாகும். இதை கூகுள் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக செய்தது மட்டும் அல்லாமல் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. காலம் காலமாக மக்களின் தேடல் மற்றும் அவர்களின் விருப்பத்தை தொடர்பான டேட்டாவை கூகுள் வைத்திருக்கும் காரணத்தால் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு தேவையான தகலை சிறப்பாக வழங்கியது மூலம் கூகுள் குரோம் தொடர்ந்து ஆதிக்க நிலையிலேயே உள்ளது.
இதனாலேயே எந்த ஒரு நிறுவனத்தாலும் கூகுள் குரோம் ஆதிக்கை அசைக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையில் புதிதாக வந்த ஏஐ தொழில்நுட்பத்தில் கூகுள்-ஐ காட்டிலும் பல நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும் வேளையில் இதே பயன்படுத்தி அடுத்தக்கட்டத்திற்கு செல்ல ஓப்பன்ஏஐ மற்றும் perplexity முடிவு செய்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் ஓபன்ஏஐ மற்றும் perplexity ஆகிய இரு நிறுவனங்களும் முக்கியமான தேவை என்னவென்றால் அது மக்களின் தேடல் குறித்த டேட்டா தான், இதை கூகுள் மற்ற நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்க முடியாது என திட்டவட்டமாக முடிவு செய்திருக்கும் வேளையில் ஓப்பன்ஏஐ மற்றும் perplexity ஆகிய இரு நிறுவனங்களும் சொந்தமாக பிரவுசர் உருவாக்க முடிவு செய்து கூகுளுக்கு நெத்தி அடி அடித்துள்ளது.
ஓபன்ஏஐயின் அறிமுகம் செய்ய தயாராக இருக்கும் இந்த பிரவுசர், சாட்ஜிபிடியின் 400 மில்லியன் வாராந்திர பயனர்கள் பயன்படுத்தினால், கூகுள் குரோமின் ஆதிக்கத்தை எளிதாக உடைக்க முடியும். இந்த பயனர்கள், ஓபன்ஏஐயின் பிரவுசருக்கு மாறினால், கூகுளின் விளம்பர வருவாயில் அடி விழும்.
கூகுள் குரோம், ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் விளம்பர வருவாயில் முக்கிய தூணாக விளங்குகிறது, இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு பங்களிக்கிறது. ஏற்கனவே கூகுளின் குரோம் தளம், ஓபன்ஏஐ மற்றும் perplexity-ன் ஏஐ சர்ச்-ன் ஆதிக்கத்தை உடைக்க கடந்த வாரம் AI MODE என்ற விஷயத்தை அறிமுகம் செய்து குறிப்பிடத்தக்கது.
கூகுள் குரோம், தற்போது உலகளவில் 65%க்கும் மேற்பட்ட பிரவுசர் சந்தைப் பங்கை வைத்திருக்கிறது. இந்த நிலைலியில் கூகுள், ஓப்பன்ஏஐ மற்றும் perplexity பிரவுசர் மற்றும் சர்ச்-ல் ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு வருவது மக்களின் தரவுகள் நுகர்வை பெரிய அளவில் மாற்றப்போகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications