உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் அலுவலகத்தை திறந்துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன்ஏஐ, இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை திறக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே மைக்ரோசாப்ட், கூகுள், ஓராக்கிள், மெட்டா என பல நிறுவனங்கள் இருக்கும் வேளையில் தற்போது ஏஐ நிறுவனமான ஓபன்ஏஐ இந்தியாவில் அலுவலகத்தை திறக்க உள்ளது.
ஓபன்ஏஐ நிறுவனம் தனது முதல் அலுவலகத்தை டெல்லியில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனத்திற்கு அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட 2வது பெரிய சந்தையாக இந்தியா திகழும் காரணத்தாலும், இந்தியாவில் அதீத திறன் கொண்ட டெக் வல்லனர்கள் இருக்கும் காரணத்தாலும் இந்தியாவில் புதிய அலுவலகத்தை திறக்க முடிவு செய்துள்ளது.

மைக்ரோசாப்ட்-ன் பெரும் முதலீட்டில் இயங்கி வரும் ஓபன்ஏஐ நிறுவனம் இந்தியாவில் அலுவலகத்தை திறப்பதற்காக சட்டப்பூர்வமான அமைப்பை உருவாக்கியுள்ளது, மேலும் உள்ளூர் ஊழியர்களை பணியமர்த்தத் தொடங்கியுள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓபன்ஏஐயின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், இந்த அறிக்கையில் கூறுகையில், "இந்தியாவில் முதல் அலுவலகத்தை தொடங்குவதும் வெறும் வர்த்தக நோக்கமாக இல்லாமல் உள்ளூர் பணியாளர்கள் குழுவை உருவாக்கி நாடு முழுவதும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வழிவகை செய்யப்படும் எங்களின் உறுதிப்பாட்டின் முதல் படியாகும். இந்தியாவுக்காகவும், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை தொழில்நுட்பத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்" என்று தெரிவித்தார்.
ஏஐ சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இதே வேகமாகவும் குறைவான செலவிலும் மேம்படுத்த வேண்டும் என்பதால் சாம் ஆல்ட்மேன் இந்தியாவை சேர்வு செய்துள்ளார்.

இந்தியா டெக் சேவை துறையில் கிங் மேக்கராக இருக்கும் வேளையில், இந்சியாவில் சேவை துறை அடிப்படையிலான ஊழியர்கள் ஏராளாம், இதை அடிப்படையாக வைத்து ஓபன்ஏஐ LLM தாண்டி பிற சேவைகளை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக சோஷியல் மீடியா, வெப் பிரவுசர் போன்றவற்றை உருவாக்கலாம்.
மேலும் ஓபன்ஏஐ நிறுவனம் சமீபத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் மலிவு விலை திட்டத்தை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் இந்திய சந்தையில் புதிய வாடிக்கையாளர்களை ஓபன்ஏஐ பெறுவதில் கடும் போட்டி உள்ளது. கூகுளின் ஜெமினி மற்றும் பெர்ப்ளெக்சிட்டி போன்ற போட்டி நிறுவனங்கள், தங்கள் மேம்பட்ட சேவைகளை பல பயனர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications