மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பெரும் முதலீட்டில் இயங்கி வரும் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI), தனது அடிப்படை வணிக முறையை லாப நோக்க நிறுவனமாக மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரையில் OpenAI நிறுவனம் லாப நோக்கமற்ற நிறுவனமாகவே இயங்கி வருகிறது, இதனால் மொத்த நிறுவனத்தையும் லாப நோக்கமற்ற நிர்வாகம் தான் கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் இதை மாற்றும் திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ளது சாம் ஆல்ட்மேன் தலைமையிலான OpenAI.

இந்த மாற்றத்திற்குப் பின்பு ஓபன்ஏஐ இலாபமற்ற நிறுவனம் தொடர்ந்து செயல்படும், லாப நோக்க நிறுவனத்தில் சிறுபங்கு பங்கைக் கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது.
இந்த நடவடிக்கை மூலம் OpenAI நிறுவனம் தன்னிடம் இருக்கும் தரவுகளை மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர்களாக்கு விற்பனை செய்ய முடியும். இதற்காகத் தனி லாப நோக்க நிறுவனத்தையும், நிர்வாகத்தையும் தனியாக உருவாக்க உள்ளது.
அதே நேரத்தில், ஓபன்ஏஐ-யின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மிரா முரட்டி, தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் OpenAI லாப நோக்க நிறுவனமாக மாறுவதால் தான் இந்த முடிவை மிரா முரட்டி இந்த முடிவை எடுத்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எக்ஸ் என்ற தளத்தில், முரட்டி தான் தனிப்பட்ட முறையில் OpenAI நிறுவனத்தை விட்டு வெளியேறி புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன். இதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
முரட்டியின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து, சிஇஓ சாம் ஆல்ட்மேன் அவரது பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். "நாங்கள் விரைவில் இப்பதவியில் யார் வரப்போகிறார் என்பது குறித்த திட்டங்கள் பற்றி விரைவில் கூற உள்ளோம்" என்று தெரிவித்தார்.
முரட்டியின் வெளியேற்றம் OpenAI நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் மிகவும் முக்கியமான காலக்கட்டத்தி நடக்கிறது. இந்நிறுவனம் தற்போது 150 பில்லியின் டாலர் மதிப்பீட்டில் 6.5 பில்லியன் டாலர் நிதியைத் திரட்ட உள்ளது. இருப்பினும், இந்த நிதி சுற்று நிறுவனம் இலாப நோக்கற்ற நன்மை நிறுவனமாகத் திரட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications