ஏஐ நிறுவனங்கள் இதுநாள் வரையில் என்டர்பிரைஸ் அளவிலான சேவைகளையும், தனது சாட்பாட் வாயிலாகத் தான் சேவைகளை அளித்து வந்தது.. ஆனால் தற்போது ஏஐ ஏஐெண்ட் புரட்சி டெக் துறையில் வெடித்துள்ளது.
சமீபத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமுக வலைத்தளத்தை நிர்வாகம் செய்யும் மெட்டா நிறுவனம் MUSE AI என்ற ஒரு பர்சனல் ஏஐ ஏஐெண்ட் சேவையை அறிமுகம் செய்தது, இது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட வேலைகளை ஆட்டோமேட் செய்வதற்காக உருவாக்கப்பட்டு அறிமுகமானது.

உதாரணமாக டிக்கெட் புக் செய்வது, ஹோட்டல் புக் செய்வது, ஆன்லைன் ஷாப்பிங் செய்வது என தனிநபர்களின் வேலையை ஆட்டோமேட் செய்யும் வகையில் இந்த MUSE ஏஐ ஏஜெண்ட்கள் வேலை செய்யும்.
இதற்குப் போட்டியாக ஓப்பன்ஏஐ நிறுவனம் DOTS என்ற பர்சனஸ் ஏஐ ஏஜெண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. கொஞ்சம் வித்தியாசமாக இந்த டாட்ஸ் ஐடி மற்றும் டெக் ஊழியர்களுக்கான ஒரு always-on AI agents ஆக இருக்கும். இப்புதிய DOTS ஏஐ ஏஜெண்ட்-ஐ நேற்று நடந்த ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் டெவலப்பர் டே கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த DOTS ஒரு நபரின் தினசரி வேலையை எவ்விதமான கண்காணிப்பும் இல்லாமல் செய்யக்கூடிய அளவிலான திறன் கொண்டது. உதாரணமாக ஒரு ஊழியர்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய சேல்ஸ் ப்ரோபோசலை வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்றால் அதற்கான மாற்றங்களை அனுமதிக்கப்பட்ட அளவில் மாற்றிக்கொடுக்கும்.
மேலும் DOTS ஏஐ ஏஜெண்ட்-கள் ஸ்லாக், டீம்ஸ், CODEX, சாட்ஜிபிடியின் வொர்க் டூல்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றவும் செய்யும். இதேபோல் ஒரு திட்டத்தில் தொடர்ந்து மாற்றங்கள் வருகிறது என்றால் அதை ஒவ்வொரு முறையும் ஏஐ உதவியுடன் Prompt கொடுத்து மாற்றுவதைக் காட்டிலும் இந்த DOTS ஏஐ ஏஜெண்ட் மூலம் மாற்றம் வந்த உடன் அப்டேட் செய்யும் வகையில் உருவாக்க முடியும்.
கோடிங் மாற்றம், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகள், ஒரு வேலையை முடித்த பின்பு அடித்த வேலையைச் செய்யும் ஏஐ ஏஜெண்ட்-க்கு தரவுகளைக் கொடுப்பது, பல்வேறு ஏஐ ஏஜெண்ட்களை மொத்தமாக ஒரு ஏஐெண்ட் நிர்வாகம் செய்வது என பல வேலைகளை மிகவும் எளிதாக பல்வேறு கனெக்டர்கள் உடன் இணைந்து பணியாற்றும் வகையில் DOTS உருவாக்கப்பட்டு உள்ளது.
MUSE எப்படி தனிநபர்களுக்கான பணிகளை செய்கிறதோ, DOTS வொர்க்பிளேஸ் பணிகளை மேற்கொள்ளும். ஆனால் இரண்டிலும் ஒரு கேள்வி உள்ளது, எந்தளவுக்கு நாம் ஏஐ ஏஜெண்ட்களுக்கு தனிநபர் தரவுகளைப் பகிர்கிறோம் என்பது. மேலும் இந்த ஏஐ ஏஜெண்ட்கள் எப்படி கட்டுப்படுத்த முடியும், எப்படிக் கண்காணிக்க முடியும் என்ற கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பி வருகிறது.


Click it and Unblock the Notifications


