ஆபரேஷன் சிந்தூர்: சென்செக்ஸ், நிஃப்டி நிலைமை இன்று என்ன..?

இந்திய ராணுவம் முப்படைகளையும் ஒன்றிணைத்து ஆபரேஷன் சிந்தூர் பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை வெற்றிகரமாக தாக்கியுள்ளது. இதில், பாகிஸ்தானின் பஹவல்பூர், முரிட்கே, மற்றும் சியால்கோட் உள்ளிட்ட நான்கு இலக்குகளும், PoK-இல் ஐந்து இலக்குகளும் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதல் பங்குச்சந்தையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.

நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 155.77 புள்ளிகள் சரிந்து 80,641.07 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 81.55 புள்ளிகள் குறைந்து 24,378.60 புள்லிகளை அடைந்தது. மே 6ஆம் தேதி வர்த்தகம் சரிவுடன் முடிந்தாலும், மே 7ஆம் தேதி காலையில் கிஃப்டி நிஃப்டி குறியீடு 0.52 சதவீதம் உயர்ந்து 24,351.50 புள்ளிகளில் வர்த்ககமாகி வருகிறது. இதனால் மும்பை பங்குச்சந்தையும், தேசிய பங்குச்சந்தையிலும் இன்று உயர்வுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர்: சென்செக்ஸ், நிஃப்டி நிலைமை இன்று என்ன..?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் நடந்த ஐந்து முக்கிய மோதல்களில் இந்திய பங்குச் சந்தைகளில் எப்படிப்பட்ட தாக்கத்தை எதிர்கொண்டது என்பதை பார்க்கும் போது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கை கிடைக்கும்.

இந்தியா - பாகிஸ்தான் மத்தியில் பல தாக்குதல் நடந்துள்ளது 1999 கார்கில் போர் முதல் 2019 புல்வாமா தாக்குதல் வரை, இன்று ஆபரேஷன் சிந்தூர். இந்த மோதல்கள் இந்தியாவின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளில் ஏற்ற இறக்கங்களை உருவாக்கின. சில மோதல்களில் சந்தைகள் சரிவை சந்தித்தாலும், மற்றவற்றில் வலுவாக உயர்ந்துள்ளது.

கார்கில் போர் (1999): 1999 மே 3 முதல் ஜூலை 26 வரை நடந்த கார்கில் போரின் போது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் வெறும் 0.8% மட்டுமே சரிந்தன. இந்திய ராணுவத்தின் வெற்றி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தன.

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் (2001): 2001 டிசம்பர் 13 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல், இந்திய பங்குச் சந்தைகளில் உடனடி சரிவை ஏற்படுத்தியது. ஆனால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் வெளியானதும், சந்தைகள் மீண்டன. இறுதியாக, சென்செக்ஸ் 0.7% மற்றும் நிஃப்டி 0.8% சரிந்து முடிந்தன.

மும்பை 26/11 தாக்குதல் (2008): 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல், மும்பை நகரத்தை முடக்கிய போதிலும், இந்திய பங்குச் சந்தைகள் ஆச்சரியப்படுத்தும் வகையில் உயர்ந்தன. தாக்குதல் நடந்த இரு நாட்களில், சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகளும், நிஃப்டி 100 புள்ளிகளும் உயர்ந்தன. இந்திய அரசு மற்றும் பாதுகாப்பு படைகளின் உடனடி நடவடிக்கைகள், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

உரி தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் (2016): 2016 செப்டம்பர் 18 அன்று, ஜம்மு-காஷ்மீரின் உரி அருகே இந்திய ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, இந்திய படைகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் (surgical strike) நடத்தின. இந்த நிகழ்வுகளால், செப்டம்பர் 18 முதல் 26 வரை, இந்திய பங்குச் சந்தைகள் 2%க்கு மேல் சரிந்தன.

புல்வாமா தாக்குதல் (2019): 2019 பிப்ரவரி 14 அன்று ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல், இந்திய பங்குச் சந்தைகளை எதிர்மறையாக பாதித்தது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 1 வரை, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் 1.8%க்கு மேல் சரிந்தன. இந்த தாக்குதல், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றங்களை உயர்த்தியதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்ந்தனர்.

இந்த ஐந்து மோதல்களும், இந்திய பங்குச் சந்தைகள் வேகமாக மீண்டு வருவதை காட்டுகிறது. புல்வாமா மற்றும் உரி தாக்குதல்களின் போது ஏற்பட்ட சரிவுகள், முதலீட்டாளர்களிடையே உருவான பயத்தை காட்டிலும், மும்பை 26/11 மற்றும் கார்கில் போர் போன்ற நிகழ்வுகளின் போது இந்திய சந்தையின் மீதான நம்பிக்கையை காட்டியுள்ளது. நாடாளுமன்ற தாக்குதலின் போது, விரைவான மீண்டு வந்துள்ளது இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல்கள், குறுகிய காலத்தில் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தினாலும், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருப்பதால், இத்தகைய பதற்றங்களை சமாளிக்க முடியும்.

இந்த வரலாற்று நிகழ்வுகள், இந்திய பங்குச் சந்தைகளின் பின்னடைவு திறனை உறுதிப்படுத்துகின்றன. முதலீட்டாளர்கள், இத்தகைய நெருக்கடிகளின் போது பயத்தை தவிர்த்து, நீண்டகால முதலீட்டு உத்திகளை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+