ஆபரேஷன் சிந்தூர்: பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா? இந்திய ராணுவத்தின் தரமான சம்பவம்!

பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் அப்பாவி மக்களை குறிவைத்து கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான நபர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நேற்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் சில பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியது. இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சூட்டியுள்ள பெயர்தான்.

ஆம்.. இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" எனப் பெயர் சூட்டியுள்ளது. சிந்தூர் என்பது குங்குமத்தைக் குறிக்கும் பெயர். திருமணமான இந்து பெண்கள் குங்குமத்தை தங்கள் அடையாளமாக அணிவது வழக்கம். அப்படி இருக்கையில் ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று நடந்த தாக்குதலில் புதிதாக திருமணமான ஆண்கள் உட்பட ஏராளமானோர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அதிகாலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை இணைந்து மேற்கொண்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்: பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா? இந்திய ராணுவத்தின் தரமான சம்பவம்!

"சற்று நேரத்திற்கு முன்பு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இங்கிருந்து தான் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது. எனவே 9 இடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது", என்று இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் தீவிரவாதிகள் பைசரன் புல்வெளியில் இந்துமத ஆண்களை குறி வைத்து மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றனர். இந்த இடம் ஹனிமூனுக்காக தம்பதிகள் அதிகம் செல்லும் இடங்களில் ஒன்றாகும். அப்படித்தான் திருமணம் ஆகி வெறும் 6 நாட்களே ஆன ஹிமான்ஷி நர்வால் என்ற பெண் தனது கணவரான லெப்டினன்ட் வினய் நர்வால் உடலின் அருகில் இருந்து கதறிய காட்சி பார்ப்போரை துயரத்தில் ஆழ்த்தியது. சில நாட்களுக்குப் பிறகு தனது கணவருக்கு அஞ்சலி செலுத்த வந்த போது அந்தப் பெண்ணின் நெற்றியில் குங்குமம் இல்லாமல் இருந்தார்.

தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நாட்டை உலுக்கியது மட்டுமல்லாமல், திருமணமான இளம் பெண்களை துயரத்திற்கு ஆட்படுத்தியது. இந்தியாவில் திருமணம் ஆன பெண்களின் நெற்றியில் குங்குமம் இருக்கும். தனது கணவனின் இருப்பை குறிக்கும் விதமாக குங்குமம் இட்டுக் கொள்வார்கள். இது பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. ராஜபுத்திர மற்றும் மராட்டிய வீரர்கள் தங்கள் நிலத்தையும் தர்மத்தையும் காக்க எதிரிகளுடன் போரிடும்போது நெற்றியில் குங்குமத்துடன் கம்பீரமாக காட்சியளித்துள்ளதாக வரலாறு கூறுகிறது.

பதிலடி தாக்குதலாக இருந்தாலும் அப்பாவி குடிமக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தாமல் பாகிஸ்தானும், பாகிஸ்தானும் ஆதரவு பயங்கரவாதிகளும் இருக்கும் முகாம்கள் மற்றும் தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என புதன்கிழமை அன்று இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதோடு முக்கியமாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+