அமெரிக்கா: பிரபல ஐடி நிறுவனமான ஒராக்கிள் (Oracle Corporation) தங்களுடைய ஊழியர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒராக்கிள் நிறுவனத்தின் கிளவுட் இன்பிராஸ்ட்ரக்சர் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒராக்கிள் நிறுவனம் பெருமளவிலான ஊழியர்களை பணியில் இருந்து நீக்க போவதாக கடந்த வாரம் தகவல் பரவிய நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அது செய்தியாக வெளிவந்துள்ளது. எத்தனை பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறித்த விரிவான தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் லேஆஃப்.காம் என்ற தளம் நவம்பர் 1ஆம் தேதி உயர் பதவியில் இருக்கும் 11 பேருக்கு பணி நீக்கம் குறித்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக கூறுகிறது.

ஒராக்கிள் நிறுவனத்தின் கிளவுட் இன்பிராஸ்ட்ரக்சர் பிரிவில் 15,000 பேர் பணி புரிகின்றனர் இவர்களில் 0.01% பேர் வேலையில் இருந்து அனுப்பப்பட்டனர் என மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. ஊழியர்களுக்கு வேறு எந்த வாய்ப்பையும் வழங்காமல் உடனடியாக வேலையை விட்டு நின்று விடும்படி மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக அண்மையில் கல்லூரி பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஃபிரஷராக பணிக்கு சேர்ந்தவர்கள் தொடங்கி மூத்த இயக்குனர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் வரை இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிளைன்ட் தளத்தில் ஒராக்கிள் நிறுவன ஊழியர்கள் சிலர் பதிவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒராக்கிள் நிறுவனம் அதிக ஊதியம் பெறும் நபர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக குறைந்த ஊதியத்தில் ஆட்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில் அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களே இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் சிலர் கூட வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு தான் ஒராக்கிள் நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பிராந்தியங்களில் இருக்கும் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க போவதாக அறிவித்திருந்தது.
அதிக ஊதியம் வாங்கக்கூடிய ஊழியர்கள் இருக்கும் பகுதிகளில் எல்லாம் ஆட்களை குறைத்து விட்டு இந்தியா போன்ற குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு வரும் பிராந்தியங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒராக்கிள் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது என சிலர் கூறுகின்றனர்.
உலக அளவில் நான்காவது பெரிய கிளவுட் உள்கட்டமைப்பு நிறுவனமாக இருக்கிறது ஒராக்கிள். அண்மையில் தான் இந்த நிறுவனம் கூகுள் க்ளோவோடு மற்றும் அமேசான் வெப் சர்வீஸ் ஆகியவற்றோடு இணைந்து புதிய சேவைகளை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
Story Written by: Devika
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications