நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அதிரடி பணி நீக்கங்கள், ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வருடக் கணக்காக உண்மையாக உழைத்தும் ஏன் இந்த நிலை என்ற கேள்வி பல ஊழியர்களின் மத்தியில் எழுந்துள்ள சூழலில், ஒரு ஸ்ரேயாஸ் மேக்த என்ற கார்ப்பரேட் ரெக்ரூட்டர் பகிர்ந்துள்ள சமூக வலைதள பதிவு காட்டுத்தீயாக பரவி வருகிறது.

நன்றாக கடின வேலை செய்வது மட்டும் உங்களை பாதுகாக்காது என்று அவர் கொடுத்துள்ள அந்த எச்சரிக்கை, பலரது கண்களையும் திறந்திருக்கிறது. அப்படியானால் இன்றைய டிஜிட்டல் உலகில் உண்மையான வேலை பாதுகாப்பு என்பது எது? திறமையை விட முக்கியமானது வேறொன்று இருக்கிறதா? அந்த ரெக்ரூட்டர் உடைத்திருக்கும் அந்த ரகசியம் என்ன என்பதை பார்ப்போம்.

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

சில தினங்களுக்கு முன்பு முன்னணி ஐடி நிறுவனமான ஆரக்கிள் பல ஆயிரம் பேரை ஒரே இரவில் பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் நம் வேலை எப்போது பறிபோகுமோ என்ற பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏஐ-யால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற பதற்றமும் தொற்றிக் கொண்டுள்ளது. ஆனால் ஆரக்கிள் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையானது, வெறுமனே மறுசீரமைப்பு திட்டமாக பார்க்க முடியாது. பல ஊழியர்களும் நாம் தொடர்ந்து கடினமாக வேலை செய்தால் தான் வேலையை காப்பாற்றி கொள்ள முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் ஒரு கார்ப்பரேட் ரெக்ரூட்டர் ஒருவர், திறமையும் உழைப்பும் மட்டுமே ஒருவரின் வேலையை தக்க வைத்துக் கொள்ள போதுமானதல்ல. இன்றைய கார்ப்பரேட் சூழலில் எதிர்பாராத மாற்றங்கள் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

Also Read

ஒரு புறம் பணி நீக்கம் செய்து வரும் ஆரக்கிள் நிறுவனம், மறுபுறம் ஏஐ குறித்த உள்கட்டமைப்புகளுக்கு முதலீடு செய்தும் வருகிறது. இது ஒட்டுமொத்த தொழில்துறையிலும் ஏற்படும் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. அமேசான் போன்ற மிகப்பெரிய கிளவுட் நிறுவனங்களுடன் போட்டியிட இத்தகைய முதலீடுகள் மிகவும் அவசியமானவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் போட்டித் தன்மைக்கான விலை, ஊழியர்களின் பணி நீக்கமே தவிர்க்க முடியாத ஒரு கசப்பான முடிவாக இருக்கிறது.

2025ம் ஆண்டின் நடுத்தர காலத்தில் உலகம் முழுவதும் சுமார் 1,62,000 ஊழியர்களை கொண்டுள்ள ஆரக்கிள் நிறுவனம், தனது வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பிற்கு இடையிலான ஒரு சிக்கலான சமநிலையை தக்க வைக்கப் போராடி வருகிறது. ஆரக்கிள் போன்ற பெரிய நிறுவனங்கள், பல ஆண்டுகள் அங்கேயே பணியாற்றி ஓய்வு பெறலாம் என திட்டமிடும் தளங்களாகும். ஆனால் அந்த பெருமையானது தற்போது உதவில்லை. அமேசான், மெட்டா, கூகுள்,மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் பட்டியலில் தற்போது ஆரக்கிள்ளும் சேர்ந்துள்ளது. ஆக நிலையானது என்ற நம்பிக்கை ஒரே நாள் உடைந்து விட்டது.

Recommended For You

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பலரும் இதை எதிர்பார்க்கவே இல்லை. தங்களது கடின உழைப்பும், விசுவாசமும் தங்களை காப்பாற்றும் என நம்பினார்கள். ஆனால் அது பலிக்கவில்லை. உங்கள் பணித்திறன், நீங்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய கால அளவு அல்லது உங்களுக்கு சமீபத்தில் கிடைத்த பதவி உயர்வு எதுவுமே உங்களை பணி நீக்கத்தில் இருந்து பாதுகாக்காது. ஏனெனில், நிறுவனங்கள் பட்ஜெட் தொடர்பான முக்கிய முடிவுகளை நீங்கள் எட்டிப்பார்க்க முடியாத மூடிய அறைகளுக்குள் எடுக்கின்றன.

ஆக உங்கள் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். சந்தையில் உங்கள் திறமைக்கான மதிப்பு என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் நீங்களே ஒரு கேள்வியை கேட்டு பாருங்கள். நாளை என் வேலை போனால் அடுத்த 60 நாட்களுக்குள் என்னால் ஒரு புதிய வேலையை பெற முடியுமா? இந்த கேள்விக்கு பதிலானது இல்லை என்றால், இப்போதிலிருந்தே நீங்கள் செயல்பட தொடங்குங்கள். உண்மையான பாதுகாப்பு என்பது நீங்கள் பார்க்கும் வேலையில் அல்ல. எந்த சூழலிலும் எங்கு வேண்டுமானாலும் உங்களால் வெற்றி பெற முடியும் என்ற திறமையும், ஏற்றுக் கொள்ளக் கூடிய மன நிலையும் இருப்பது தான் . நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில் மட்டுமல்ல, எங்கு வேண்டுமானாலும் வேலை தேடிக் கொள்ளும் அளவுக்கு தகுதியுடன் இருப்பதே ஒரே வழி என்றும் அந்த ரெக்ரூட்டர் விளக்கம் அளித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+