உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் மீண்டும் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுக்க தொடங்கிவிட்டன. ஜனவரி மாதத்தில் அமேசான் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 16,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.
அமேசானை தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த முன்னணி டெக் நிறுவனமான oracle தங்கள் ஊழியர்களில் 30,000 பேரை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. oracle நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 20,000 முதல் 30,000 வரையிலான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க போவதாக இன்வெஸ்ட்மென்ட் வங்கி டிடி கோவன் தெரிவித்து இருக்கிறது.

oracle நிறுவனம் தற்போது அதிக அளவில் ஏஐ டேட்டா சென்டர்களை கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான நிதி ஒதுக்குவதற்காக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் கூட இந்த நிறுவனம் சாட் ஜிபிடிக்கான டேட்டா சென்டர்களை கட்டுவதற்கான ப்ராஜெக்ட்டை பெற்றது.

இது தவிர பல்வேறு நிறுவனங்களிடமும் டேட்டா சென்டர்களை கட்டமைப்பதற்கான ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால் oracle நிறுவனம் இப்படி டேட்டா சென்டர் திட்டங்களில் கவனம் செலுத்துவது அளவுக்கு மீறியதாக இருக்கிறது என கூறி பல்வேறு அமெரிக்க வங்கிகளும் அந்த நிறுவனத்திற்கு கடன் வழங்குவதையும் நிதி உதவி வழங்குவதையும் நிறுத்தி வைத்திருக்கின்றன.
ஒரு புறம் டேட்டா சென்டர் ஒப்பந்தங்களை முடிக்க வேண்டும், மறுபுறம் கடன் உதவியும் கிடைக்கவில்லை. எனவே எடுத்த ப்ராஜெக்ட்களை முடிப்பதற்காக oracle நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு அதன் மூலம் சேமிக்கும் பணத்தை கொண்டு டேட்டா சென்டர்களில் கவனம் செலுத்த போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Oracle நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதன் 10 பில்லியன் டாலர்கள் வரை சேமிக்க முடியும் என சொல்லப்படுகிறது. ஆனால் oracle கையில் வைத்திருக்கும் திட்டங்களுக்கு 156 பில்லியன் டாலர்கள் வரை பணம் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே மாற்று ஏற்பாடுகளையும் சிறு சிறு டேட்டா செண்டர்களையும் வாங்க oracle திட்டமிட்டிருக்கிறது.
ஒரு வேளை oracle 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டால் நிறுவன வரலாற்றிலேயே இத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறையாக இருக்கும். 2025 ஆம் ஆண்டில் தான் இந்த நிறுவனம் சுமார் 10,000 பேரை வேலையில் இருந்து நீக்கியது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications