உலகளாவிய டெக் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் ஏஐ வைத்து எப்படியெல்லாம் பிஸ்னஸ்-ஐ மேம்படுத்த முடியும் என தீவிரமாக ஆலோசனை செய்து வரும் இதேவேளையில் அதிகளவிலான ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது.
ஏஐ சேவை என்பது ஊழியர்கள் முதல் டெக் கட்டமைப்பு வரையில் செலவு மிகுந்தது என்பதால், நிர்வாகம் இதற்காக அதிகப்படியான செலவுகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது. இந்த சூழ்நிலையில் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரையில் பணிநீக்கத்தில் ஈடுப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஓராக்கிள், தனது மிகவும் சக்திவாய்ந்த கிளவுட் கம்பியூட்டிங் பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிநீக்கத்திற்கு முக்கிய காரணமாக செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு அமைப்பதில் ஏற்படும் பெரும் செலவுகளை சமாளிக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தப்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோர் செயல்திறன் சார்ந்த பிரச்சனைகளால் வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது. இதேவேளையில் ஓராக்கிள் இப்பிரிவில் புதிய ஊழியர்களை நியமிக்கும் பணிகளை தொடர்கிறது.
சியாட்டில் பகுதியில் இருக்கும் கிளவுட் கம்பியூட்டிங் பிரிவில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதைப் பற்றி ஓராகக்ள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், இத்தகவலை Datacenter Dynamics என்ற டெக் செய்தி இதழ் உறுதி செய்து வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

ஏஐ எழுச்சி காரணமாகவும், கிளவுட் கம்பியூட்டிங் தேவை அதிகரித்துள்ளதால் ஒராக்கிள் பங்குகள் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் ஒராக்கிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான லாரி எல்லிசன் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக முதல் முறையாக உயர்ந்தார். ஆயினும் இந்நிறுவனத்தில் 150 ஊழியர்கள் பணிநீக்கம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சில அளிக்கிறது.
மேலும், ஒராக்கிள் கடந்த ஆண்டு ஓராக்கிள் தனது தலைமையகத்தை நாஷ்வில்லுக்கு மாற்றுவதாக அறிவித்தது, இதன் காரணமாகவும் சில பணிநீக்கங்கள் செய்யப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் கார்ப் இந்த ஆண்டு 15,000 பணியிடங்களை நீக்கியுள்ளது, அதேபோல் அமேசான் மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications