இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ (Zomato) தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் உணவு மற்றும் மளிகை சாமான்கள் டெலிவரி செய்யும் செயலிகள் நாள்தோறும் வேகமான வளர்ச்சியை கண்டு வருகின்றன. அந்த வகையில் சோமேட்டோ மிகப் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனம் ஆகும்.
வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக இந்நிறுவனம் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிதாக ஒரு லாயல்டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பிராண்ட் பேக்ஸ் (Brand Packs) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதல் தள்ளுபடிகளை பெற முடியும். ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் இருந்து அடிக்கடி உணவினை ஆர்டர் செய்யக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலம் கூடுதல் தள்ளுபடி கிடைக்க உள்ளது.

இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல் அடிக்கடி ஒரே கடையில் இருந்து உணவு ஆர்டர் செய்கிறீர்களா உங்களுக்கு தான் இந்த நற்செய்தி எனக் கூறியுள்ளார். உங்களுக்கு அதிக தள்ளுபடி வழங்க போகும் இந்த திட்டத்தின் பெயர் பிராண்ட் பேக்ஸ் என கூறியுள்ளார்.
அதாவது ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் இருந்து நீங்கள் அடிக்கடி உணவு ஆர்டர் செய்கிறீர்கள் என்றால் இனி அந்த உணவகத்தில் நீங்கள் உணவினை ஆர்டர் செய்யும் போது கூடுதலாக உங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் எனக் கூறியுள்ளார் .
இதற்காக சுமார் 4000 உணவகத்தோடு கைகோர்த்து இருப்பதாக தீபிந்தர் கோயல் கூறியுள்ளார். இந்த செய்தி சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபிந்தர் கோயலின் எக்ஸ் பதிவிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இது மிகவும் அற்புதமான செய்தி நான் எப்போதுமே குறிப்பிட்ட உணவகங்களில் இருந்து மட்டும்தான் எனக்கான உணவினை ஆர்டர் செய்வேன் தற்போது அதன் மூலம் எனக்கு கூடுதலாக தள்ளுபடி கிடைக்கிறது எனும் போது மகிழ்ச்சியை தருகிறது என ஒரு பயனர் கூறியுள்ளார்.
பல வாடிக்கையாளர்களும் இந்த முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர் இதன் மூலம் சோமேட்டோ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதோடு மீண்டும் மீண்டும் அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் உயரும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications