5 பிரிவுகளில் ஆஸ்கரை தட்டித்தூக்கிய அனோரா!. அனுஜா தோல்வியால், ஒரே வாய்ப்பை இழந்தது இந்தியா!.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணி முதல் தொடங்கிய ஆஸ்கர் விருது விழாவில், 2024 இல் வெளியிடப்பட்ட திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (AMPAS) சார்பாக விருது வழங்கப்பட்டது. நகைச்சுவை நடிகரும் பாட்காஸ்டருமான கோனன் ஓ'பிரைன் முதல் முறையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் கலந்துகொண்ட அனைத்து பிரபலங்களுக்கும் சிவப்பு கம்பள அணிவகுப்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 23, 2025 அன்று பெவர்லி ஹில்ஸில் உள்ள சாமுவேல் கோல்ட்வின் திரையரங்கில் இந்த விருதுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன. அனோரா, தி ப்ரூடலிஸ்ட், தி கம்ப்ளீட் அன்னோன் கான்க்ளேவ், டூன்: பார்ட் 2, எமிலியா பெரெஸ், அயம் ஸ்டில் ஹியர், நிக்கல் பாய்ஸ், தி சப்ஸ்டன்ட், விக்கட் ஹாலிவுட்டில் இருந்து ஆகிய படங்கள் இந்த முறை விருத்திற்காக பரிந்துரைக்கப்பட்டன. அந்தவகையில், இந்த ஆண்டின் பரிந்துரைகளில் எமிலியா பெரேஸ் முன்னணியில் இருந்தாலும், அனோரா விழாவின் மிகப்பெரிய வெற்றியாளராகவும் மாறி, ஐந்து பிரிவுகளை விருதுகளை தட்டிச்சென்றது. முன்னதாக, நடிகை மார்கரெட் குவாலி மற்றும் பாப் நட்சத்திரங்கள் டோஜா கேட், லிசா மற்றும் ரே ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. K-pop இசையை ஆஸ்கார் அரங்கிற்கு கொண்டு வந்ததற்காக BLACKPINK இன் லிசா பரவலான பாராட்டைப் பெற்றார்.

5 பிரிவுகளில் ஆஸ்கரை தட்டித்தூக்கிய அனோரா!. அனுஜா தோல்வியால், ஒரே வாய்ப்பை இழந்தது இந்தியா!.

2025 ஆஸ்கார் விருது வென்றவர்கள்: சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட 13 பரிந்துரைகளுடன் இந்த ஆண்டு எமிலியா பெரெஸ் என்ற திரைப்படம் முதலிடத்தில் இருந்தாலும், சிறந்த அசல் திரைக்கதை கொண்ட 'அனோரா' திரைப்பட இயக்குநர் Sean Bakerக்கு, சிறந்த திரைப்படத்துக்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 'அனோரா' சிறந்த படம், சிறந்த நடிகை (மைக்கி மேடிசன்), சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்பட எடிட்டிங் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை வென்றது.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அட்ரியன் பிராடிக்கு வழங்கப்பட்டது. THE BRUTALIST படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் அட்ரியன் ப்ராடி. இந்த படத்தில் லாஸ்லோ டோத் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நாயகன் எனும் ஆஸ்கர் பரிசை வென்றார். இந்த படத்தை பிரேடி கோர்பெட் இயக்கினார். இந்த ஆண்டின் சிறந்த இசைக்கான (Original Score) ஆஸ்கர் விருதை THE BRUTALIST படத்திற்காக வென்றார் டேனியல் ப்ளம்பெர்க். THE BRUTALIST படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் லோல் கிராலி.

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை பிரேசில் தட்டிச் சென்றது. வால்டர் சால்ஸ் இயக்கிய I'M STILL HERE படத்திற்கு சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான விருதை வென்றது Dune 2. Paul Lambert, Tristan Myles, Brian Connor, & Gerd Nefzer . BLADE RUNNER 2049, First Man, Dune படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஷுவல் எஃபெக்ட்ஸிற்காக விருது வெல்கிறார் Paul Lambert.

இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஏற்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை அணைக்கப் போராடிய தீயணைப்பு வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர். மேலும் அதில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜாக் ஆடியார்ட் எழுதி இயக்கி 2024 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் மொழி திரைப்படமான எமிலியா பெரெஸ் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை அவதார் படத்தில் ஹீரோயினாக நடித்த ஜோ சல்டானா வென்றுள்ளார். சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதை No Other Land வென்றாலும், சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான விருதை The Only Girl in the Orchestra பெற்றது. No Other Land படத்தினை இயக்கிய இயக்குநர்கள், பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்த வேண்டும், காசா போருக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த ஆண்டின் சிறந்த இசைக்கான (Original Score) ஆஸ்கர் விருதை THE BRUTALIST படத்திற்காக வென்றார் டேனியல் ப்ளம்பெர்க். சிறந்த பாடல் - எமிலியா பெரெஸில் இடம்பெற்ற "எல் மால்" (கிளெமென்ட் டுகோல் மற்றும் காமில் - இசை; கிளெமென்ட் டுகோல், காமில் ஆகியோர் இந்த விருதை ஏற்றுக்கொண்டனர். சிறந்த அனிமேசன் திரைப்படத்துக்கான விருதை வென்றது FLOW திரைப்படம். கான்கிளேவ் திரைப்படத்திற்கு சிறந்த தழுவல் திரைக்கதைகாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது, சிறந்த அனிமேஷன் குறும்படமாக இன் தி ஷேடோ ஆப் தி சைப்ரஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரத்டிற்கும் தி சப்ஸ்டன்ஸுக்கு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படமான ஐ ஆம் நாட் ஏ ரோபோக்கு விருது அறிவிப்பு.

சிறந்த தயாரிப்புக்கான ஆஸ்கர் விருதை Wicked திரைப்படம் வென்றது. இயக்குனர் ஜான் எம் சூவின் இசை கற்பனை படமான விக்கெட் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பிற்கான ஆஸ்கார் விருதைப் பெற்றது. முன்னதாக விழாவில், இது சிறந்த ஆடை வடிவமைப்பையும் வென்றது. இந்த படத்தில் சிந்தியா எரிவோ, அரியானா கிராண்டே, ஜோனாதன் பெய்லி, ஈதன் ஸ்லேட்டர் மற்றும் போவன் யாங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதேபோல், இந்தியாவிலிருந்து லபடா லேடீஸ், ஆல் வி இமேஜின் அஸ் லைட் போன்ற படங்கள் நாமினேட் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அனுஜா என்ற குறும்படம் மட்டுமே நாமினேட் ஆனது. அனுஜா எனும் குறும்படத்தை பிரியங்கா சோப்ராவும், குனீத் மோங்கா, சுசித்ரா மட்டாய் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்திருந்தார்கள். டெல்லியில் வாழும் அனுஜா என்ற 9 வயது சிறுமி மற்றும் அவரது சகோதரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தக் குறும்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை ஆடம் ஜே.க்ராவ்ஸ் இயக்கியிருந்தார். மிகப்பெரிய வரவேற்பை இந்தியாவில் இக்குறும்படம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அனுஜா எனும் குறும்படத்தை பிரியங்கா சோப்ராவும், குனீத் மோங்கா, சுசித்ரா மட்டாய் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்திருந்தார்கள். டெல்லியில் வாழும் அனுஜா என்ற 9 வயது சிறுமி மற்றும் அவரது சகோதரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தக் குறும்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை ஆடம் ஜே.க்ராவ்ஸ் இயக்கியிருந்தார். மிகப்பெரிய வரவேற்பை இந்தியாவில் இக்குறும்படம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அனுஜா குறும்படம் I'm Not A Robot என்ற சைன்ஸ் ஃபிக்‌ஷன் குறும்படத்திடம் விருதினை பறிகொடுத்தது. I'm Not A Robot குறும்படம் டச்சு - ஆங்கில மொழியில் உருவானது ஆகும். இந்தக் குறும்படத்தை விக்டோரியா வார்மெர்டாம் இயக்க; ஹென்ரி கில்லெட், விம் கொசென்ஸ் உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர்.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற அட்ரியன் பிராடியின் தற்போதைய சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூபாய் 100 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. சிறந்த நடிக்கைக்கான ஆஸ்கர் விருது பெற்ற மைக்கி மேடிசனின் நிகர மதிப்பு $60 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது , சிறந்த துணை நடிகரான கீரனின் சொத்து மதிப்பு 2025 ஆம் ஆண்டில் $5 மில்லியனாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+