OTT (ஓவர்-தி-டாப்) தளங்கள் டிவியை முடிவுக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது OTT தங்கள் டிவியைப் போலவே மாறி வருகிறது. இது சாதாரண மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உண்மையை இதுதான்!
OTT தளங்களுக்கும், கேபிள் டிவி, டிவி சேனல்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்றால் விளம்பரம் தான். OTT தளங்கள் வந்த புதியதில் இண்டர்நெட் மற்றும் ஒரு டிவி இருந்தால் போதும், விளம்பரம் இல்லாமல் திரைப்படங்களைப் பார்க்க முடிந்தது. அடுத்து சில காலத்தில் இதற்கு கட்டணம் வந்தது, கட்டணத்துடன் புதிய புதிய திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் மக்கள் எவ்விதமான தயக்கமுமின்றி கட்டணத்தைச் செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து கட்டணம் படிப்படியாக உயர்த்தியது, இதையும் சகித்துக்கொண்டு செலுத்திய மக்களுக்கு தற்போது வந்த புதிய பிரச்சனை விளம்பரம். OTT தளங்கள் அறிமுகம் செய்துள்ள சப்ஸ்கிரிப்ஷன் திட்டங்களில் விளம்பரம் இல்லாத சேவை வேண்டுமாயின் அதிகப்படியான கட்டணத்தில் ஒரு திட்டத்தை மட்டுமே வைத்து வர்த்தகம் செய்து வருகிறது. கட்டணம் குறையக் குறைய விளம்பரம் அதிகரிக்கும் நிலை தான் தற்போது OTT தளங்களில் உள்ளது. இதில் எந்த தளத்திற்கும் விதிவிலக்கு இல்லை என்பது தான் உண்மை.
ஹாட்ஸ்டார் தற்போது தனது அடிப்படை திட்டத்தில் எபிசோட்களுக்கு இடையே 2 விளம்பரங்களை 3 ஆக உயர்த்தியுள்ளது, அமேசான் பிரைம் கடந்த மாதம் கூடுதல் கட்டணம் செலுத்தாவிட்டால் விளம்பரங்கள் காட்டப்படும் என முடிவை எடுத்தது, யூடியூப் அமைதியாக விளம்பர நேரத்தையும், எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது.
இதில் நெட்ஃபிளிக்ஸ் தற்போது பல நாடுகளில் குறைவான கட்டணத்தில் விளம்பர கன்டென்ட் திட்டங்களை டெஸ்டிங்க் செய்து வருகிறது. இது ஒரு பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்தால் அடுத்த சில வருடத்தில் கேபிள் டிவிக்கு இணையாக விளம்பரம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
OTT தளங்கள் முதலில் "விளம்பர இல்லாத, தடையற்ற, கேபிள் இல்லாத அனுபவம்" என்று உறுதியளித்தன. ஆனால் இப்போது டிவி சேனல்களை போல் பழைய முறைகளுக்கு மாறி வருகிறது. வருமானம் ஈட்டுவதற்கும், முதலீட்டாளர்களுக்கு லாபத்தை காட்டவும், பெரும்பாலான OTT தளங்கள் பயனர்களின் அனுபவத்தைக் குறைப்பது, விளம்பரங்களை அதிகரிப்பது மற்றும் விளம்பரங்களை நீக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பது என பல வேலைகளை செய்து வருகிறது.
OTT-ல் ஏன் விளம்பரங்கள் அதிகரிக்க என்ன காரணம்?:
இந்த மாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. முதலில், கன்டென்ட் உருவாக்க செலவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது, அடுத்து மார்க்கெட்டிங் செலவுகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், OTT தளத்திற்கு கன்டென்ட் கொடுப்பவர்கள் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதை தொடர்ந்து OTT நிறுவனங்கள் மத்தியில் கன்டென்ட் வாங்குவதற்கான போட்டி காரணம் விலை உயர்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் லாபகரமான வர்த்தகத்தை உருவாக்க வேண்டும் என்பதால் OTT நிறுவனங்கள் விளம்பரங்களை அதிகரித்து பிற வழிகளில் பணம் சம்பாதிக்க முயல்கின்றன.
இதேபோன்ற நிலை தான் தற்போது குவிக் காமர்ஸ் துறையிலும் உள்ளது, ஆரம்பத்தில் மக்கள் அதிக தள்ளுபடி, இலவச டெலிவரி, வேகமான டெலிவரி என விரும்பி சென்ற நிலையில் பல மளிகை கடைகள் மூடப்பட்டது. ஆனால் இப்போது கூடுதல் வருமானத்திற்காகக் குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல கட்டணங்களை விதித்து வருகிறது. இது மளிகைக் கடைகளைக் காட்டிலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
ஆன்லைன் உணவு டெலிவரி துறையிலும் இது தான் நடக்கிறது. ஹோட்டல்கள் நேரடியாக விற்கப்படும் உணவின் விலையைக் காட்டிலும் சோமேட்டோ, ஸ்விக்கி தளத்தில் விற்கப்படும் உணவின் விலை 50 முதல் 80 சதவீதம் வரையில் அதிகமாக நிர்ணயம் செய்து விற்கிறது. இதற்கு முக்கிய காரணம் சோமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் ஹோட்டல்களிடம் வசூலிக்கும் கமிஷன் தொகை அதிகமாக இருக்கும் காரணத்தால் இதை ஈடு செய்ய உணவின் விலையை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் ஹோட்டல்களில் விற்கப்படும் உணவை 100 சதவீதம் அதிகமான கட்டணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் நீங்கள் OTT-ஐ தொடர்ந்து பயன்படுத்துவீர்களா அல்லது கேபிள் டிவி, DTH-க்கு மாறுவீர்களா..? உங்க பதிலை கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications