90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் அப்ஸரா பென்சில்.. அப்பா, அம்மாவிடம் அடம்பிடித்து அடிவாங்கியது மறக்க முடியுமா..?

பாபுபாய் என்ற பி ஜே சங்வியும் அவரது நண்பர்கள் ராம் நாத் மேஹ்ரா, மான்சூகனியும் சேர்ந்து 1958 ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் பென்சில் நிறுவனத்தை தொடங்கினர். அந்தக் காலத்தில் இந்தியக் குழந்தைகளுக்குப் பிடித்தமான பிராண்டாக நட்ராஜ் பென்சிலும் அப்ஸரா பென்சிலும் இருந்தன.

இந்த பென்சில்கள் சிவப்பு கருப்பு கோடுகள், சாம்பல் கருப்பு கோடுகள் என தனித்துவமான கலர்கள் பூசப்பட்டிருந்தன. எழுதுவதற்கும், வரைவதற்கும் இந்தப் பென்சில்கள் சிறந்தவையாக இருந்தன. அதிலும் குறிப்பாக அப்சரா பென்சில் வாங்க அப்பா, அம்மாவிடம் அடம்பிடித்த 90ஸ் கிட்ஸ்

90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் அப்ஸரா பென்சில்.. அப்பா, அம்மாவிடம் அடம்பிடித்து அடிவாங்கியது மறக்க முடியுமா..?

பெரியவர்களாக வளர்ந்து விட்டாலும் இந்த பென்சில்களில் பூர்வீகத்தை அறிவதில் எல்லாருக்குமே ஆர்வம் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட ஆர்வத்தில் இந்த பென்சில்களின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் பலருக்கும் ஆச்சரியத்தைத் தரும். நட்ராஜ் பென்சில் அப்ஸரா பென்சில் போட்டிப் நிறுவனங்கள் பலரும் நினைத்திருப்பர், ஆனால் இந்த இரண்டு பென்சில்களையுமே ஹிந்துஸ்தான் பென்சில் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

1958 ஆம் ஆண்டில் பாபுபாய் என்ற பி ஜே சங்வியும் அவரது நண்பர்கள் ராம் நாத் மேஹ்ரா, மான்சூகனியும் சேர்ந்து ஹிந்துஸ்தான் பென்சில் நிறுவனத்தை தொடங்கினர். பென்சில்கள் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வத்தில் ஜெர்மனிக்கு சென்று பென்சில் செய்யும் கலையை கற்று வந்து அதில் மாஸ்டர்கள் ஆனார்கள்.

இந்தியாவுக்கு வந்தவுடன் தாங்கள் கற்றதை வைத்து நட்ராஜ் பென்சிலை தயாரித்தனர். பெரும்பான்மை மக்களுக்கு விலை கட்டுபடியாகக் கூடிய அதேநேரத்தில் சிறந்த தரமான பென்சில்களை அவர்கள் தயாரித்தனர். இதனால் அவர்களது பென்சில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒருகட்டத்தில் பாபுபாய் சங்வி கம்பெனியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆச்சரியப்படத்தக்க அளவில் பெரிது படுத்தினார்.

பென்சில் தயாரிப்புத் தொழிலில் ஹிந்துஸ்தான் பென்சில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விஸ்வரூபம் எடுத்து சந்தையில் 60 சதவீதப் பங்கைக் கைப்பற்றியது. அதன் முக்கிய தயாரிப்புகளான நட்ராஜ், அப்ஸரா மக்களின் இதயத்தைக் கவர்ந்தது. கிட்டத்தட்ட 50 நாடுகளில் பெரும்பாலான குடும்பங்களின் அங்கமாக இந்த பென்சில்கள் விளங்கின.

1958இல் நட்ராஜ் பென்சில் ஒரு டிராயிங் பென்சிலாக அறிமுகமானது. 1970இல் அறிமுகமான அப்ஸரா பென்சில் முதலில் ஒரு டிராயிங் பென்சிலாகவே வடிவமைக்கப்பட்டது.

இப்போது நட்ராஜ், அப்ஸரா பிராண்டில் இருந்து எழுதும் பொருட்கள், எரேஸர்கள், வாட்டர்கலர், ஸ்கேல், வேக்ஸ் கிரையான்கள், ஆயில் பேஸ்டர்கள், கணக்கியல் உபகரணங்கள் என பலதரப்பட்ட தயாரிப்புகள் வந்துவிட்டன.

இந்தியாவின் மிகப் பெரிய பென்சில் உற்பத்தியாளராக ஹிந்துஸ்தான் பென்சில்ஸ் பிரைவேட் லிமிடெட் வளர்ந்து விட்டது. தினமும் 8.5 மில்லியன் பென்சில்களை தயாரிக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.
இது மட்டுமல்லாமல் 1.7 மில்லியன் ஷார்ப்னர்கள், 2.7 மில்லியன் எரேஸர்கள், 0.3 மில்லியன் ஸ்கேல்கள் மற்றும் 1 மில்லியன் பேனாக்களையும் தினசரி தயாரிக்கின்றன.

இதில் நட்ராஜ் 621 HB சிவப்பு மற்றும் கருப்பு வரிகளான பென்சில் இந்த நிறுவனத்தின் சின்னமாகவே மாறிவிட்டது. குறிப்பிடத்தக்க வகையில் ஹிந்துஸ்தான் இந்த பென்சில்களைப் பொருத்தவரையில் இரட்டை உத்தியை கையாண்டது. நட்ராஜ் பென்சில் சாதாரணப்பட்டவர்களுக்கும் விலை மலிவானதாகவும் விற்கப்பட்டது. அப்ஸரா பென்சில்கள் பிரீமியம் வகையினருக்காக தயாரித்து விற்கப்பட்டது.

நட்ராஜ் பென்சில் விளம்பரங்களில் மீண்டும் மீண்டும் சாம்பியன் என்றும் அப்ஸரா பென்சில் விளம்பரங்களில் ஃபைவ் மார்க் எக்ஸ்ட்ரா என்றும் வேறுபட்ட தரப்பினரை கவரும் வகையில் வெளிவந்தன.

90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் அப்ஸரா பென்சில்.. அப்பா, அம்மாவிடம் அடம்பிடித்து அடிவாங்கியது மறக்க முடியுமா..?

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ளது ஓக்கு கிராமம். இந்த கிராமத்தை பென்சில் கிராமம் என்றழைக்கின்றனர். இங்கு சுமார் 250 குடும்பத்தார் வசிக்கின்றனர். இதில் 3 தொழிற்சாலைகளில் பென்சில் தயாரிப்புக்கான மரச்சட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

ஹிந்துஸ்தான் பென்சில்ஸ் இந்த மூலப் பொருளைத்தான் மிகவும் நம்பியுள்ளது. சிறப்பான எழுதும் தன்மைக்கு இந்தச் சட்டங்கள் அடிப்படையாக உள்ளன. ஹிந்துஸ்தான் பென்சில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களாக ஹரேந்திரா மற்றும் கீர்த்தி ஷாங்வி உள்ளனர். அவர்களது பிள்ளைகள் பௌமிக், துருமன் ஆகியோர் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பை வகிக்கின்றனர்.

அண்மைக் காலமாக நிறுவனத்தின் வளர்ச்சி சற்று சரிந்து வரும் நிலையில் ஷாங்வி குடும்பத்தார் தங்களது தொழிலை பென்சில் தயாரிப்புகளிலிருந்து பல்வேறு தரப்புகளில் விரிவுபடுத்தி வருகின்றனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டபோதிலும் இந்த பென்சில் தயாரிப்பாளர்கள் பென்லெஸ், பேப்பர்லெஸ் காலம் இன்னும் முழுவதுமாக உருவாகிவிடவில்லை என்று நம்புகின்றனர்.

சிறுவயது பென்சில் பாக்ஸ்களில் இருந்து உலகளாவிய பிராண்டாக ஹிந்துஸ்தான் பென்சில்ஸ் லிமிடெட்டின் சகாப்தம் ஓங்கி உயர்ந்து விட்டநிலையில் பல ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கும் பசுமை மாறாத இளமைக்கால நினைவுகளை சுமப்பவர்களுக்கும் இது ஒரு பெருமைக்குரிய நினைவுச் சின்னமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+