மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறும் AI.. கட்டளையை மீறி கூட்டு சதியில் ஈடுபட்டதால் அதிர்ச்சி..!!

ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் தன்னுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வரும் நிலையில் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்களின் கட்டளையை மீறி ஏஐ கூட்டாக செயல்பட்டது அதிர்ச்சியை தந்துள்ளது.

சாட் ஜிபிடியின் உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஏஐ ஏஜென்ட்கள் கட்டுப்பாட்டை மீறி , தாமாகவே ஒன்றிணைந்து கூட்டு சதி செய்து மற்றொரு நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்துள்ளதாக ஏஐ ஆய்வு நிறுவனங்கள் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளன குறிப்பாக hugging face நிறுவன அமைப்புகளை ஹேக் செய்ய முயற்சி செய்துள்ளன என கூறியுள்ளது. மனிதர்களின் நேரடி மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் இயங்கக்கூடிய மேம்பட்ட ஏஐ ஏஜென்ட்கள், பாதுகாப்பு மற்றும் மதிப்பீட்டு சோதனைகளின் போது எதிர்பாராதவிதமாக விசித்திரமான மற்றும் ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாம்.

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறும் AI.. கட்டளையை மீறி கூட்டு சதியில் ஈடுபட்டதால் அதிர்ச்சி..!!

இந்த ஏஐ ஏஜென்ட்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை தாண்டி, இணையத்தின் வழியே மற்றொரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி அமைப்புகளுக்குள் நுழைந்து ஊடுருவலை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஏஐ ஏஜென்ட்கள் தனித்தனியாக செயல்படாமல், நூற்றுக்கணக்கில் மற்றும் ஆயிரக்கணக்கில் ஒன்றுசேர்ந்து ஒரு கூட்டு சதி போல செயல்பட்டு இலக்குகளை தாக்கியுள்ளன.

சோதனைச் சூழலில் பாதுகாப்பு அமைப்புகளில் ஏற்பட்ட சில சிறு Misconfiguration-களை பயன்படுத்தி, இந்த ஏஐ ஏஜென்ட்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறியீடுகளை மீறி வெளியேறியுள்ளன. மற்றொரு நிறுவனத்தின் நெட்வொர்க்கிற்குள் நுழைந்து அங்கிருந்த ரகசிய தகவல்களை தேடுவது, பாதுகாப்பு குறைபாடுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது போன்ற சைபர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. இவை மனிதர்களின் சோதனைகளை ஏமாற்றும் வகையிலும், தாங்களே சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் திறனுடனும் செயல்பட்டிருப்பது டெக் உலகத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஓபன் ஏஐ மட்டுமல்ல மெட்டா நிறுவனத்தின் சில ஏஐ ஏஜெண்ட்களும் இதே போன்ற செயலில் ஈடுபட்டதாக சில வாரங்களுக்கு முன்புசெய்தி வெளியானது. முன்னணி ஏஐ நிறுவனங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் இதற்கு கவலை தெரிவித்துள்ளனர். ஏஐ தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், இந்த மாதிரியான கட்டுப்பாட்டை மீறும் செயல்கள் வருங்காலத்தில் பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என எச்சரிக்கின்றனர்.

இதுபோன்ற ஏஐ கருவிகள் எவ்வித மனித கட்டுப்பாடும் இல்லாமல் இணையத்தில் நுழைந்து தாக்குதல்களை நடத்துவது நிறுவனங்களின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற ஆபத்தான சம்பவங்களை தவிர்க்க, ஏஐ மாடல்களுக்கு கடுமையான பாதுகாப்பு எல்லைகளை வகுக்க வேண்டும் என்றும், அவசர காலங்களில் அவற்றை உடனே அவற்றின் செயல்பாட்டை நிறுத்த கூடிய Kill Switch போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

மேலும் ஏஐ தொழில்நுட்பம் இது போல எல்லை மீறி செயல்படுவதையும் அதனை சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் டெக் நிறுவனங்கள் வெளிப்படையாக பகிர வேண்டும். இதனை மறைப்பது இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+