பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் ஸ்கீம் போர்டல் தொடங்கப்பட்ட ஒரு நாளுக்குள் 1,55,109 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட PM இன்டர்ன்ஷிப் ஸ்கீம், வேலை தேடும் இளைஞர்களை பல்வேறு நிறுவனங்களுடன் இணைக்கும் முயற்சியாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்பின்மையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்பட உள்ளது.
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான பதிவு அக்டோபர் 12-ஆம் தேதி துவங்கியது. பதிவு தொடங்குவதற்கு முன்னதாக பல நிறுவனங்களால் 90,800 இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்ட போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இங்கு வழங்கப்படும் இன்டென்ஷிப்புக்காக விண்ணப்பதாரர்கள் 1,55,109 பதிவு செய்துள்ளனர்.

ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ, முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற முக்கிய தனியார் நிறுவனங்கள் உட்பட, இதுவரை 193 நிறுவனங்கள் இந்த தளத்தில் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை பதிவு செய்துள்ளன. இந்த முயற்சி எண்ணெய், எரிவாயு மற்றும் ஆற்றல், வாகனங்கள் மற்றும் வங்கி போன்ற துறைகளில் இருந்தும் பதிவுகள் வந்துள்ளன.
பல நாட்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்வது குறித்து கவலைகள் எழுந்த நிலையில், இந்த முயற்சியை அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் பணி அனுபவத்தை பெற்று அவர்களுக்கான பாதைகளை உருவாக்கிக் கொள்ளலாம். திறமையை தேடும் நிறுவனங்களுக்கும் வாய்ப்புகளை தேடும் இளைஞர்களுக்கும் இந்தத் திட்டம் ஒரு பாலமாக இருக்கும் என்று அரசாங்கம் வட்டாரம் தெரிவிக்கிறது.
உற்பத்தி, பராமரிப்பு, விற்பனை உட்பட 24 துறைகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஃபீல்டு வேலை வாய்ப்புகளுக்கான பதிவுகளும் இந்த போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 737 மாவட்டங்களிலும் இந்த திட்டத்திற்கான வேலை வாய்ப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல நிறுவனங்களும் பணி நீக்கங்களை அறிவித்து வரும் நிலையில் வேலை வாய்ப்பின்மையை குறைப்பதற்காகவும், புதிதாக வேலை தேடும் இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கம் இந்த முயற்சிகளை தொடங்கியுள்ளது. மேலும் பல நிறுவனங்களிலும் தங்களுக்கு தேவைப்படும் திறன்களை கொண்ட இளைஞர்கள் குறைவாக இருக்கின்றர். இந்தத் திட்டத்தின் மூலம் இந்த இடைவெளி நீங்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.
PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின் நன்மைகள்: பயிற்சி பெறுபவர்களுக்கு 12 மாதங்கள் வரை மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். மேலும் அரசாங்கம் ஒரு முறை மானியமாக ரூ.6,000 வழங்கும், இது இளைஞர்கள் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் சேர்ந்தவுடன் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு பயிற்சியாளரும் அரசாங்கத்தின் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications