ஓயோ நிறுவனம் புத்தாண்டு தினத்தன்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் ஓயோ அறைகளில் தங்கியுள்ளனர். இது 2023-ஆம் ஆண்டில் முன்பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட 58 சதவீதம் அதிகமாகும். இந்த தகவல்களை மிகவும் மகிழ்ச்சியுடன் ஓயோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனது X பதிவில் பகிர்ந்திருந்தார்.
"இந்த புத்தாண்டு நம்ப முடியாத தொடக்கமாக உள்ளது. உலகம் முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த புத்தாண்டு தினத்தில் எங்களின் அறையில் தங்கியுள்ளனர். இதிலிருந்து உலகம் கொண்டாட்டங்களுக்கு தயாராக உள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்த அற்புதமான பயணத்தில் எங்களுடன் இணைந்ததற்கு பெருமிதம் கொள்கிறோம். 2025-ஆம் ஆண்டு மறக்க முடியாத தருணமாக அமையட்டும்", என்று தனது X பதிவில் பதிவிட்டிருந்தார்.

ரித்தேஷ் மற்றோரு பதிவில் அதிகாலை 2 மணிக்கு மேல் 41% மக்கள் அதிகரித்ததாக பதிவிட்டிருந்தார். சமீபத்தில் ஜி6 ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனத்தை ஓயோ ரூ.4,463 கோடிக்கு கையகப்படுத்தியது. அதோடு 2024-ஆம் ஆண்டில் வரிக்கு பிறகு ஓயோ நிறுவனத்தின் லாபம் ரூ. 229 கோடியாக உள்ளது.
இந்த கையகப்படுத்தல் முயற்சியின் காரணமாக, ஒயோ நிறுவனத்தின் EBITDA 2025 முதல் 2026-ஆம் நிதியாண்டில் ரூ. 2,000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டல் 6 நிறுவனம் வரும் நிதியாண்டில் ரூ. 630 கோடிக்கு மேல் EBITDA பங்களிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. EBITDA என்பது ஆங்கிலத்தில் "Earnings Before Interest, Taxes, Depreciation, and Amortization" என்பதன் சுருக்கம் ஆகும். இது வட்டி, வரி, தேய்மானம் ஆகியவற்றுக்கு முந்தைய லாபத்தைக் குறிக்கிறது.
ஓயோ நிறுவனத்தின் சமீபத்திய கையகப்படுத்தல் மற்றும் நிதி நிறுவனத்தின் நிதிநிலை உயர்வு ஆகியவை ஹோட்டல் துறையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோட்டல் துறைகள் மட்டுமின்றி பிளிங்கிட் போன்ற ஆன்லைன் டெலிவரி தளங்களும் புத்தாண்டுக்கு முந்தைய தினம் விற்பனை வளர்ச்சியை கண்டன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications