உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான கூகிள் பிப்ரவரி மாத துவக்கத்தில் சோனி மற்றும் மைக்ரோசாப்ட்-க்குப் போட்டியாக உருவாக்கத் திட்டமிட்ட கேமிங் திட்டத்தைக் கைவிட முடிவு செய்தது.
இதன் வாயிலாக இப்பிரிவில் பணியாற்றிய 150க்கும் அதிகமான ஊழியர்கள் தற்போது பணிநீக்கம் செய்யப்படும் உள்ளனர். இதற்கான அறிவிப்பைக் கூகிள் நிறுவனத்தின் துணைத் தலைவரான பில் ஹாரிசன்
கூகிள்-ன் கேமிங் தளம்
உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் கேமிங் வர்த்தகத்திற்குள் சோனி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இத்துறைக்குள் கூகிள் நுழைய வேண்டும் எனத் திட்டமிட்டு பியூச்சரிஸ்டிக் தொழில்நுட்பம் கொண்ட ஒரு மிகப்பெரிய கேமிங் தளத்தை உருவாக்கத் திட்டமிட்டது.
ஸ்டாடியா திட்டம்
இதற்காக 150 ஊழியர்கள் கொண்ட ஸ்டாடியா என்னும் முக்கியமான திட்டத்தை அறிமுகம் செய்தது, கூகிள்-ன் இந்தத் திட்டம் மொத்த கேமிங் உலகையைப் புரட்டிப் போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூகிள் இத்திட்டத்தைக் கைவிட்டது.
இதனால் 150 ஊழியர்களுக்கும் இப்பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கூகிள் தனது திட்டத்தை அறிவிக்கும் ஒரு வாரத்திற்கு முன்பே ஊழியர்களுக்கு இத்திட்டம் மூடப்படும் அறிவிப்பைத் தெரிவித்துள்ளனர்.
அதிகப்படியான முதலீடுகள்
கூகிளின் இந்தக் கேமிங் தளத்தின் திட்டம் மிகவும் கடினமானதாகவும், அதிகப்படியான முதலீடு தேவைப்படுவதாகவும் இருக்கும் காரணத்தால் இத்திட்டத்தைத் தற்போது கைவிடுவதாகப் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்தது. கூகிளின் இந்த அறிவிப்பு கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
கேமிங் கனவு
மேலும் கூகிள் தனது கேமிங் வர்த்தகக் கனவுகளில் இருந்து முழுமையாக வெளியேறவில்லை தொடர்ந்து இத்துறையில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளைத் தொடர்ந்து செய்யவும், சாதகமான சூழ்நிலை உருவாகும் போது கண்டிப்பதாக ஆன்லைன் கேமிங் துறைக்குள் நுழையும் எனக் கருத்து நிலவுகிறது.


Click it and Unblock the Notifications