8 மாதத்தில் 175000 டெக் ஊழியர்கள் பணிநீக்கம்.. களத்தில் இறங்கிய அமெரிக்க அரசு.. இனி என்னவெல்லாம் நடக்குமோ!

டெக் மற்றும் ஐடி சேவை துறையில் பணிநீக்கம் என்பது கடந்த 5 வருடங்களாக தொடர்கிறது, ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பணிநீக்கத்திற்கான காரணம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது. இது வெறும் பணிநீக்கத்தை தாண்டி பொருளாதாரம், வர்த்தகம், நகர்வோர், உற்பத்தி, ரியல் எஸ்டேட் என பல விஷயங்களை பாதிக்கிறது.

இந்த நிலையில் கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூஸோம் ஏஐ மூலம் ஏற்படும் பணிநீக்க பாதிப்பை கண்காணிக்க புதிய டூல் அறிமுகம் செய்துள்ளார். இதேபோல் நிறுவனங்களிலும் ஏஐ மூலம் ஏற்படும் பணிநீக்கத்திற்கு எதிரான குரல் எழ துவங்கியுள்ளது.

 8 மாதத்தில் 175000 டெக் ஊழியர்கள் பணிநீக்கம்.. களத்தில் இறங்கிய அமெரிக்க அரசு.. இனி என்னவெல்லாம் நடக்குமோ!

சமீபத்தில் கூகுள் நிறுவனத்தில் பல ஆயிரம் ஊழியர்கள் ஏஐ தொடர்புடைய பணிநீக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கவும், பாதுகாப்பு தேவை எனவும் கூறியுள்ளனர். இதனால் இனி வரும் காலக்கட்டத்தில் ஏஐ பணிநீக்கத்தை நிறுவனங்களும், அரசும் எப்படி கையாளப்போகிறது என்பது மிகவும் கவனிக்க கூடிய விஷயமாக இருக்கும்.

மேலும் அமெரிக்கா முதல் இந்தியா வரையில் தற்போது ஏஐ சார்ந்த பணிநீக்கம் மாஸ் லேப்ஆப் ஆக நடக்கமால் சிறிது சிறிதாக நடப்பதால் இதன் தாக்கம் முழுமையாக உணரப்படுவது இல்லை.

2026ஆம் ஆண்டில் 8 மாதங்கள் முழுமையாக முடியாத நிலையில் உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் சுமார் 1,75,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஆப்பிள், மைக்ரோசாப்ட்டில் துவங்கி ஆரக்கிள், அமேசான், மெட்டா, டிக்டாக், விசா, உபர், சிஸ்கோ, இன்டெல் என பல முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளது.

பொதுவாக டெக் துறையில் பணிநீக்கம் என்றால் ஒரு பிரிவில் சேவைக்கான டிமாண்ட் குறைவதால் பணிநீக்கம் நடக்கம் ஆனால் தற்போது டெக்னாலஜி, கேமிங், ஈகாமர்ஸ், பேமெண்ட், மனிதவள பரிவு என அனைத்து பிரிவுகளிலும் பணிநீக்கம் நடந்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தனது பணிநீக்கத்திற்காக ஒவ்வொரு காரணத்தை கூறுகிறது.

சில நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தால் பல்வேறு பணிகள் ஆட்டோமேட் செய்யப்பட்டு உள்ள காரணத்தாலும், ஏஐ தொழில்நுட்பம் மூலம் செலவுகளை குறைத்து திறனை அதிகரித்த காரணத்தாலும் பணிநீக்கம் செய்வதாக நேரடியாக ஏஐ தொழில்நுட்பத்தை காரணம் காட்டுகிறது.

ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் வர்த்தக மாற்றம், நிறுவன மறுசீரமைப்பு, டெக் சேவைகளுக்கு மந்தமான டிமாண்ட், செவை குறைக்கும் முயற்சி என இதர பல காரணங்களை கூறி 2026ல் மட்டும் சுமார் 1,75,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக ட்ரூஅப் தெரிவித்துள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் ஒரு காலத்தில் சாட்பாட் மற்றும் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது நிறுவனத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு பிரிவிலும் பயன்படுத்த துவங்கியுள்ளது.

இதனால் பல பணிகள் வேகமாகவும், திறன்மிக்க வகையில் ஆட்டோமேட் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களின் தேவை என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் விளைவே 1,75,000 பேர் பணிநீக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+