ஜாப்பானின் கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 70.2% கார் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் 3,000 பேருக்கு மேல் பலி கொண்டுள்ள கொரோனா வைரஸ் என்றும் தெரிவித்துள்ளது. உலகின் முக்கிய பெரிய வாகன உற்பத்தியாளாரான டொயோட்டா, கடந்த பிப்ரவரியில் சீனாவில் 23,800 டொயோட்டா மற்றும் ப்ரீமியம் லெக்சஸ் கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுவே சீன பயணிகளின் கார் அசோசியேஷன் தெரிவித்துள்ள கருத்துப்படி, சீனாவின் ஒட்டுமொத்த பயணிகளின் வாகன விற்பனையானது பிப்ரவரி மாதத்தின் முதல் 23 நாட்களில் 89 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப பொருளாதார மந்த நிலை மற்றும் துண்டிக்கப்பட்ட உற்பத்தி ஆகியவை, பிப்ரவரி மாதத்தில் முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் உற்பத்தியையும் பாதித்ததாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் விநியோகச் சங்கிலியை பாதித்துள்ளது. இதன் விளைவாக உற்பத்தியை குறைக்க இது வழிவகுக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
அக்குயிட் மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சியின் தலைவர் சுமன் சவுத்ரி கூறுகையில், பயணிகள் வாகன விற்பனை மற்றும் வர்த்தக வாகன விற்பனை ஆகிய இரு பிரிவுகளுக்கும் விற்பனை கிட்டதட்ட 30% குறைந்துள்ள நிலையில், எதிர்கால சந்தையும் கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இரு சக்கர வாகன விற்பனையில் ஒரு சிறிய சரிவு மற்றும் ஒரு நல்ல ராபி பயிர் எதிர்பார்ப்பால் டிராக்டர் விற்பனையில் ஆரோக்கியமான மாற்றம் ஆகியவற்றின் மூலம் கிராமப்புற தேவையில் பச்சை சிக்னலை பிரதிபலிக்கிறது. ஆயினும் கூட ஒட்டுமொத்த வாகன விற்பனையானது பலவீனமாக இருக்கும் என்று அக்குயிட் நம்புகிறது.
மேலும் பரந்த முன்னேற்றங்கள் ஏற்பட ஒன்று அல்லது இரண்டு காலாண்டுகள் கூட ஆகலாம் என்றும் கூறியுள்ளது. இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா பிப்ரவரி மாதத்தில் அதன் மொத்த விற்பனையில் 1.1% சரிவை கண்டு 1,47,110 யூனிட்களை மற்றும் விற்றுள்ளதாகவும், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 1,48,682 யூனிட்களை விற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதே போல் அசோக் லேலண்ட் விற்பனை 47% வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக பேருந்து விற்பனை 36% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
மற்றொரு வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் விற்பனை 34% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படியாக ஒவ்வொரு நிறுவனமும் தொடர்ந்து வாகன விற்பனையில் வீழ்ச்சியை மட்டுமே கண்டுள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications