இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த பல மாதங்களாக மிகக் கடினமான காலங்களைக் கடந்து கொண்டு இருக்கிறது. மிக மோசமான விற்பனை சரிவு தொடங்கி பல ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் உற்பத்தி ஆலைகளில் வேலை இல்லா நாட்கள் அறிவித்தது வரை அந்த சிரமமான காலங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இப்போது வரை ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை ஒரு நல்ல ஏற்றத்தைக் கண்டதாகத் தெரியவில்லை.
கடந்த நவம்பர் 2019-ல் பயணிகள் வாகன உற்பத்தி 4.06 சதவிகிதம் அதிகரித்து இருந்தார்கள். ஆனாலும் நவம்பர் 2019 மாதத்தில் நடந்த ஒட்டு மொத்த ஆட்டோமொபைல் வியாபாரம் 12 சதவிகித சரிவைச் சந்தித்து இருக்கிறது என Society of Indian Automobile Manufacturers (SIAM) அறிக்கை சொல்லி இருக்கிறது.

எஸ் ஐ ஏ எம் அமைப்பின் அறிக்கையில் கடந்த அநவம்பர் 2019-ல் மொத்தம் 2,90,727 பயணிகள் வாகனங்களைத் தயாரித்து இருக்கிறார்களாம். இந்த நவம்பர் 2019-ல் ஒட்டு மொத்தமாக 2,63,773 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறார்களாம். இந்த விற்பனை கடந்த நவம்பர் 2018-ல் செய்த 2,66,000 பயணிகள் வாகன விற்பனையை விட சுமார் 0.8 சதவிகிதம் மட்டுமே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கார், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்களின் விற்பனை சரிந்து இருக்கிறது. கார்களின் விற்பனை கடந்த நவம்பர் 2018-ல் 1,79,783 ஆக இருந்து இருக்கிறது. இந்த நவம்பர் 2019-ல் 1,60,306 ஆக சரிந்து இருக்கிறது. சுமார் 10.8 சதவிகிதம் சரிவு.
அதே போல இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த நவம்பர் 2018-ல் 10,49,651 ஆக இருந்து இருக்கிறது. இந்த நவம்பர் 2019-ல் 8,93,538 ஆக சரிந்து இருக்கிறது. சுமார் 14.87 சதவிகிதம் சரிவு. வணிக வாகனங்களின் விற்பனை கடந்த நவம்பர் 2018-ஐ விட 14.98 சதவிகிதம் சரிந்து இந்த நவம்பர் 2019-ல் 61,907 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகி இருக்கிறதாம்.
ஆக ஒட்டு மொத்தமாக எல்லா ரக வாகனங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கடந்த நவம்பர் 2018-ல் 20,38,007 வாகனங்கள் விற்பனை ஆயின. ஆனால் இந்த நவம்பர் 2019-ல் வெறும் 17,92,415 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகி இருக்கின்றனவாம். ஆக 12 சதவிகிதம் சரிவு.


Click it and Unblock the Notifications