வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக பதிவு செய்யப்படாத ஆட்சேர்ப்பு முகவர்களிடம் மக்கள் ரூ.2 முதல் 5 லட்சம் வரை செலுத்தி ஏமாற்ந்து வரும் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இத்தகைய ஆட்சேர்ப்பு நிறுவனம் 100 சதவீதம் வேலைவாய்ப்புகளை பெற்று தருவது எப்போதும் சந்தேகம் தான்.
இதை கவணித்த மத்திய அரசு, வெளிநாட்டு வேலையை வாங்கித் தருவதற்கான ஆலோசனைகளை வழங்க மக்களிடம் அதிகபட்சமாக ஆட்சேர்ப்பு முகவர்கள் அல்லது ஏஜென்சிகள் எவ்வளவு தொகையை வசூலிக்க முடியும் என்பதை மத்திய அரசு தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் டிசம்பர் 14, 2023 தேதியிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவு செய்யப்படாத ஆட்சேர்ப்பு முகவர்கள், போலியான வேலை வாய்ப்புகள் காட்டி வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள் ஏமாற்றப்படும் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இப்படி ஏமாற்றப்படுபவர்கள் சராசரியாக ரூ.2 - 5 லட்சம் வரை கட்டணம் வசூலித்து ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.
முதலில் வெளிநாட்டில் பணிகளுக்கு, ஆட்சேர்ப்பு செய்வதற்கு கட்டாயமாக மத்திய வெளிவிவகார அமைச்சகத்திடம் இருந்து உரிமம் பெற வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத அமைப்புகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் முகவர்களாவர்.
இத்தகைய போலி முகவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு மோசமான நிலையில் இருக்கும் மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஐரோப்பா, கனடா, வளைகுடா நாடுகள், இஸ்ரேல், மியான்மர் நாடுகளில் வேலை வாங்கி தருவதாக நம்பிக்கை அளிக்கின்றனர்.
மேலும் சமூகவலைத்தளத்தில் இருந்து வரும் பெரும்பாலான ஏஜென்சிகள் அவர்களுடைய அலுவலக முகவரியை முழுமையாக கூறுவதில்லை, அப்படி கூறினாலும் இந்த அலுவலகம் பெட்டிக் கடை போலதான் இருக்கும்.
இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குடியேற்ற சட்டம் 1983 இன் படி, எந்த ஒரு ஆட்சேர்ப்பு முகவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தர சேவைக் கட்டணமாக ரூ. 30,000 + GST (18%) க்கு மேல் வசூலிக்கக் கூடாது. ஆட்சேர்ப்பு முகவர் அல்லது ஏஜென்சி வசூலிக்கப்பட்ட தொகைக்கான ரசீதை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications