வீடு என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்று, அதிலும் வங்கிகள் வீட்டுக் கடன்களை வாரிக் கொடுக்கும் இந்த பொற்காலத்தில் சொந்த வீடு வாங்கும் கனவு அனைவருக்கும் எளிதாகியுள்ளது. முன்பெல்லாம் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு ஓய்வூதிய தொகையை வைத்து வீடு கட்டும் காலம் போய், பணியில் சேர்ந்த 2வது வருடம் சொந்த வீடு வாங்கும் நிலை வந்துவிட்டது.
ஆனால் இந்த தருணத்தில் தான் சொந்த வீடு வாங்குவது அல்லது வாடகை வீட்டில் இருப்பதில் எது பெஸ்ட் சாய்ஸ் என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில், பலரும் வாடகை வீட்டில் இருப்பதே செலவு குறைந்தது எனக் கருதுகின்றனர். இருப்பினும், சொந்த வீடு வாங்குவது என்பது நீண்ட கால நோக்கில் சிறந்த முதலீடாக அமையும் என்ற கருத்தும் உள்ளது.

இந்த நிலையில் சொந்த வீடு வாங்குவதற்கும், வாடகை வீட்டில் இருப்பதற்கும் என தனித்தனியே நன்மைகள் இருக்கிறது, அது என்ன..?
வாடகை வீட்டில் இருப்பதன் நன்மைகள்:
பராமரிப்பு செலவுகள் இல்லை (No Maintenance Costs): வாடகை வீட்டில் இருப்பதன் முக்கிய நன்மை என்னவென்றால், வீட்டின் பராமரிப்பு மற்றும் பழுது செலவுகளை நீங்கள் ஏற்க வேண்டியதில்லை. வீட்டின் பராமரிப்பு, மேம்பாடு மற்றும் பழுது போன்ற அனைத்து செலவுகளையும் வீட்டு உரிமையாளரே ஏற்றுக்கொள்வார்.
இடமாற்றம் செய்யும் சுதந்திரம்: வேலைவாய்ப்பு அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக நீங்கள் வேறு இடத்திற்கு மாற வேண்டியிருந்தால், வாடகை வீட்டில் இருப்பது உங்களுக்கு அதிக பலன் வழங்குகிறது. வீட்டை விற்பது போன்ற சிக்கல்கள் இல்லாமல், 30 நாட்கள் நோட்டீஸ் காலம் கொடுத்து வீட்டை காலி செய்துவிட்டு புதிய இடத்திற்குச் செல்லலாம். இது குறிப்பாக வேலைக்காக அடிக்கடி இடம் மாற வேண்டியிருக்கும் நபர்களுக்கும், இளம் பணியாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வசதிகள்: சொந்தமாக வீடு வாங்கும் அதாவது சொந்தமாக நிலத்தை வாங்கி வீடு கட்டும் போது கிடைக்காத அல்லது செலவு அதிகமாக இருக்கும் பல வசதிகள் வாடகை வீட்டில் அல்லது அப்பார்ட்மென்ட் வீட்டில் கிடைக்கும். பார்க், நீச்சல் குளம், அலுவலகத்திற்கு அருகில் வீடு, ஜாக்கிங் டிராக், ஜிம் இப்படி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆப்ஷன்ஸ்: வாடகை வீட்டில் இருக்கும் போது நம்முடைய தேவைக்கு ஏற்றார் போல், ஏற்ற இடத்தில் 1 BHK முதல் வில்லா வீடு வரையில் வாடகைக்கு செல்ல முடியும். ஆனால் சொந்த வீட்டில் அப்படி நடக்காது.
சொந்த வீடு வாங்குவதன் மூலம் நன்மைகள்:
முதலீடு ஸ்திரத்தன்மை: வாடகை வீட்டில் இருப்பது உங்களுக்குப் பாதுகாப்பு உணர்வையும் ஸ்திரத்தன்மையையும் தராது. சொந்த வீட்டில் வசிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கைச் சூழலை நீங்கள் கட்டுப்படுத்தலாம். மேலும், உங்கள் விருப்பப்படி வீட்டை அலங்கரித்துக் கொள்ளலாம், மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். சொந்த வீடு வாங்குவது என்பது பெருமை மற்றும் சாதனை உணர்வையும் தரும்.
வரிச் சலுகைகள் (Tax Benefits): வீட்டுக் கடனுக்காக நீங்கள் செலுத்தும் வட்டித் தொகை மற்றும் தவணைத் தொகை ஆகியவற்றிற்கு வருமான வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. வருமான வரி சட்டத்தின் 24(b) மற்றும் 80C பிரிவுகளின் கீழ் வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் தவணைத் தொகைக்கான வரிச் சலுகைகளை அனைவராலும் பெற முடியும்.
மதிப்பு உயர்வு: சொந்த வீடு என்பது நீண்ட கால முதலீடாகவும், இந்தியாவில் எந்த ஊராக இருந்தாலும் சரி வீடுகளின் மதிப்பு உயர்ந்து வருகிறது. எனவே, சொந்த வீடு என்பது வருவாயை ஈட்டுவதற்கான ஒரு வழியாகவும் அமையும்.
வாடகை, உரிமையாளர் பிரச்சனைகள் இல்லை: சொந்த வீடு இருந்தால், வாடகை, உரிமையாளரைச் சார்ந்த எந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை.
ஓய்வுக்கால திட்டமிடல்: இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்குவது நீண்ட கால ஓய்வுக்கால திட்டமிடலுக்கு உதவும். வீட்டுக் கடனை காலப்போக்கில் முடித்துவிட்டால், ஓய்வுக்காலத்தில் வாடகை செலவு இல்லாமல் இருக்க முடியும். இதன் மூலம் ஓய்வுக்கால நிதி பிரச்சனைகளை எளிதாகக் களைய முடியும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications