தமிழ்நாட்டில் சொந்த நிலம் வைத்திருக்கும் அனைவருக்கும் பட்டா (Patta) மற்றும் சிட்டா (Chitta) போன்ற ஆவணங்கள் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். ஆனால், இந்த ஆவணங்கள் இல்லாவிட்டால் என்ன ஆகும். அவற்றை எப்படிப் பெறுவது அல்லது பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து பலருக்கும் குழப்பங்கள் இருக்கும். இந்த பதிவில் இந்த முக்கியமான ஆவணங்கள் பற்றியும், தமிழ்நாட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் முழு நடைமுறை பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.
நிலம் இருந்தால் அதற்கான ஆவணங்கள்: உங்கள் நிலத்திற்கான உரிமையை நிலைநாட்ட சில முக்கிய ஆவணங்கள் அவசியம் ஆகும்.

பட்டா (Patta): நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது என்பதற்கான அரசு நில உரிமைச் சான்றிதழ். இதுவே நிலத்தின் உரிமையாளரை அடையாளம் காட்டும் முக்கிய ஆவணம்.
சிட்டா (Chitta): நிலம் விவசாய நிலமா அல்லது வீட்டு மனையா என வகை காட்டும் ஆவணம். இப்போது இது e-Adangal, A-Register போன்ற ஆவணங்களில் இணைக்கப்பட்டுள்ளது.
FMB (Field Measurement Book): நிலத்தின் அளவு, எல்லைகள் மற்றும் பிற புவியியல் விவரங்களை உள்ளடக்கிய வரைபட ஆவணம்.
பட்டா/சிட்டா இல்லாவிட்டால் என்ன ஆகும்?: நீங்கள் உண்மையில் ஒரு நிலத்தை சொந்தமாக வைத்திருந்தாலும், உங்களிடம் பட்டா/சிட்டா போன்ற ஆவணங்கள் இல்லாவிட்டால், சட்டப்படி உங்கள் உரிமையை நிரூபிப்பது மிகவும் கடினமாகும். இதனால் ஏற்படும் சிக்கல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
விற்பனை மற்றும் கடன் பெறுவதில் சிரமம்: நிலத்தை விற்பனை செய்யவோ, அடமானம் வைத்து வீட்டுக் கடன் பெறவோ அல்லது வேறு எந்தக் கடன் பெறவோ முடியாது.
அனுமதி மறுப்பு: நிலத்தில் கட்டிடம் கட்ட அல்லது வேறு எந்தப் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி கிடைக்காது.
அரசு சேவைகளில் சிக்கல்: மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு போன்ற அத்தியாவசிய அரசு சேவைகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும்.
உரிமை தகராறுகள்: எப்போதும் அரசின் பஞ்சாயத்து/வருவாய் பதிவுகளில்" உங்கள் பெயர் காணப்படாவிட்டால், அந்த நிலத்தை வேறு யாராவது தங்களுடையது என்று கோரிக்கை செய்யும் அபாயம் உண்டு.
பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி? 1. தேவையான ஆவணங்கள்: சொத்து வாங்கிய விற்பனைப் பத்திரம் (Sale Deed) - ஜெராக்ஸ் மற்றும் அசல்.
முந்தைய உரிமையாளரின் பட்டா நகல் (Patta Copy).
அடையாள அட்டை (ஆதார் / வாக்காளர் அடையாள அட்டை).
வரி ரசீதுகள் (சொத்து வரி ரசீது, மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம்).
மரபுரிமை (Inheritance) என்றால் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate).
நீதிமன்ற உத்தரவு (Court Order) இருந்தால் அதன் நகல்.
2. விண்ணப்பிக்கும் முறை: VAO (Village Administrative Officer) அலுவலகம். தாலுகா அலுவலகம் (Taluk Office). அல்லது ஆன்லைன் மூலம்: http://eservices.tn.gov.in
3. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை: http://eservices.tn.gov.in என்ற இணையதளம் சென்று Apply for Patta/Chitta Transfer என்பதைத் தேர்வு செய்யவும். EC Number / Survey Number உள்ளீடு செய்யவும்.தேவையான விவரங்களைப் பதிவு செய்து, ஆவணங்களை PDF/JPEG வடிவில் பதிவேற்றவும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவுடன் ஒரு அங்கீகார எண் (Acknowledgement Number) கிடைக்கும். அதைக் குறித்துக் கொள்ளவும்.
4. அலுவலகத்தில் செய்யும் முறை: தாலுகா அலுவலகத்தில் இருந்து பட்டா பெயர் மாற்றம் விண்ணப்பப் படிவத்தைப் (Patta Transfer Application Form) பெறவும்.தேவையான ஆவணங்களை இணைத்து VAO மற்றும் RI (Revenue Inspector)-க்கு சமர்ப்பிக்கவும். அதிகாரிகள் ஆய்வு செய்து, அனைத்தும் சரியாக இருந்தால், தாலுகா அலுவலகத்தில் பட்டா உங்கள் பெயரில் மாற்றப்படும்.
5. கட்டணம் (Fees): ஆன்லைன் வழி - சுமார் ரூ.100 (சேவைக் கட்டணம்): ஆவணங்கள் சான்றொப்பம் செய்வதற்கான சிறு கட்டணங்கள் இருக்கும். பொதுவாக 15 - 30 நாட்களில் புதிய பட்டா கிடைக்கும்.வழக்குகள் இருந்தால் அல்லது உரிமை சந்தேகம் இருந்தால், இதற்கு அதிக காலம் ஆகலாம்.
பட்டா மாற்றம் ஆனதும், உங்கள் நிலத்தின் "A-Register Extract / e-Adangal" மற்றும் "FMB Sketch" ஆவணங்கள் உங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதுவே உங்கள் நில உரிமையை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications