கடந்த சில மாதங்களாக மைக்ரோசாஃப்ட், கூகுள் உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது முன்னணி ஆடை நிறுவனங்களில் ஒன்றான டாமி ஹில்ஃபிகர் மற்றும் கால்வின் க்ளீன் என்ற நிறுவனம் 10 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த தகவல் டாமி ஹில்ஃபிகர் மற்றும் கால்வின் க்ளீன் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டாமி ஹில்ஃபிகர் மற்றும் கால்வின் க்ளீன்
டாமி ஹில்ஃபிகர் மற்றும் கால்வின் க்ளீன் என்ற பிரபல ஆடை நிறுவனம் ஊழியர்களின் வேலைநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் குறைப்பு
அமெரிக்க ஆடை நிறுவனமான PVH Corp ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, அதிக பணவீக்கம் காரணமாக தயாரிப்புகளுக்கான செலவுகள் அதிகமாகி வருவதாகவும், எனவே நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10% ஊழியர்களை குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்
பணவீக்கம் காரணமாக நுகர்வோர் வாங்கும் திறன் குறைந்துள்ளது என்றும் அதனால் விற்பனை குறைந்துள்ளதால் நிறுவனத்தின் செலவினங்களை குறைக்கும் கட்டாயத்தில் டாமி ஹில்ஃபிகர் மற்றும் கால்வின் க்ளீன் இருப்பதாக கூறப்படுகிறது.
குறைந்த விலை
ஆடை வாங்குவது என்பது நுகர்வோரின் முன்னுரிமை இல்லை என்பதால் விற்பனை குறைந்து, சரக்குகள் அதிகளவில் கையிருப்பு இருப்பதாகவும், இதனால் குறைந்த விலையில் பொருட்களை விற்கும் கட்டாய நிலை டாமி ஹில்ஃபிகர் மற்றும் கால்வின் க்ளீன் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஊழியர்கள் குறைப்பு உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்கள்
தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் ஜூலை 2022 இல் கிட்டத்தட்ட 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. அதேபோல் எலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனமும் ஜூன் 2022 இல் பணியாளர்களை 10% குறைத்தது. கடந்த வாரம், அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு, ஏறக்குறைய 3,000 ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. அந்த வகையில் தற்போது டாமி ஹில்ஃபிகர் மற்றும் கால்வின் க்ளீன் நிறுவனமும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையை எடுக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications