ரியல் எஸ்டேட் விலைகள் விண்ணை எட்டியுள்ளன. அதற்கு ஏற்றார் போல் இந்தியாவில் வசிக்கும் பலருக்கு வருமானம் இல்லை என்பதை எடுத்துக்காட்டும் ஒரு போஸ்ட் ஆயிரக்கணக்கான இந்தியர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்ட்டை சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் மற்றும் முதலீட்டாளரான டி.முத்துகிருஷ்ணன் என்பவர் பகிர்ந்துள்ளார். சென்னை போன்ற பெரிய நகரத்தில் வசிக்கும் ஒரு தம்பதியினர் மாதத்திற்கு ரூ.1.5 லட்சம் சம்பாதித்தாலும் சொந்தமாக வீடு வாங்குவது கனவாகவே உள்ளதாக அந்தப் போஸ்டில் கூறப்பட்டுள்ளது.
முத்துகிருஷ்ணன் போஸ்ட் செய்த பதிவில், பிசியோதெரபிஸ்ட் தம்பதியினர் 30 நிமிட அமர்வுக்காக ரூ.500 ரூபாய் வசூலிக்கின்றனர். அவர்கள் அந்த பிசியோதெரபிஸ்ட் கிளினிக்கை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த தம்பதியினரில் கணவர் முழு நேரமாக வேலை செய்கிறார். அவருடைய மனைவி சில மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்கிறார். ஏனெனில் அவர் தனது இரண்டு குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார். சில நேரங்களில் கணவர் நோயாளிகளின் வீட்டிற்கும் செல்கிறார்.
மின்சாரக் கட்டணம் முதல் சொத்துவரி வரை அனைத்து கட்டணங்களையும் செலுத்த வேண்டியுள்ளது. பிசியோதெரபிஸ்ட் கிளினிக் அவர்களுடைய சொந்த சொத்து. ஆனாலும் அதற்கு EMI செலுத்த வேண்டியுள்ளது.
ஈஎம்ஐ செலுத்திய பிறகு 1.5 லட்சத்தை சேமித்தாலும் மற்ற செலவுகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவர்களைப் போல சம்பாதிப்பவர்களுக்கும் சொந்த வீடு வாங்குவது கனவாகத் தான் உள்ளது. இந்தியாவில் பணம் சம்பாதிப்பதும், செல்வத்தை உருவாக்குவதும் மிகவும் கடினமாக இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். இந்த போஸ்ட் பப்ளிஷ் செய்யப்பட்டதிலிருந்து 2.5 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது.
ஒரு பயனர் படித்த தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் வருமானத்தை வைத்து மின்சாரம் ஜிஎஸ்டி ஆகியவற்றை செலுத்தி தலைமுறை செல்வத்தை சம்பாதிப்பது அல்லது உருவாக்குவது இது போன்ற நகரங்களில் முடியாது. இதுதான் எங்களின் தற்போதைய நிலை என்று குறிப்பிட்டிருந்தார்.
மாதம் 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் கூட ஒரு நல்ல வீட்டைக் கட்ட முடியாமல் தவிக்கும் நிலைமை மிகவும் மோசமானது. அப்படியே ஆண்டுக்கு 1.5 லட்சம் சம்பளம் வாங்குபவர்களின் அவல நிலையை கற்பனை செய்து பாருங்கள். இது கொடுமையிலும் கொடுமை என்று மற்றொரு நபர் கருத்து தெரிவித்தார்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், மக்கள் கண்ணியமான மற்றும் கௌரவமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்கத் தவறிவிட்டோம். இது நம் அனைவருக்கும் அவமானம் என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார்.
டயர் 1 நகரங்களில் ரியல் எஸ்டேட் விலைகள் இருக்கும் விதத்தைப் பார்க்கும்போது, மக்கள் இன்னும் வீட்டு உரிமையைத் தேடுவதை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். மக்கள் வீடுகள் வாங்குவதை நிறுத்தியதும், ரியல் எஸ்டேட் மாஃபியா அடங்கிவிடும், விலைகள் இறுதியில் சீராகும் என்று ஒரு பயனர் எழுதியிருந்தார்.


Click it and Unblock the Notifications