அத்தியாவசியப் பொருட்களின் விலை பல தசாப்தங்களைக் காட்டிலும் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், உணவு மற்றும் எனர்ஜி துறைகளில் உள்ள பில்லியனர்களின் சொத்து மதிப்பு இரண்டு நாட்களுக்கு 1 பில்லியன் டாலர் அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் ஒவ்வொரு 30 மணிநேரத்திற்கும் புதிய பில்லியனர் உருவாக்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட அதே விகிதத்தில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் ஒவ்வொரு 33 மணிநேரத்திற்கும் தீவிர வறுமையில் தள்ளப்பட்டு இருக்கலாம் ஆக்ஸ்பாம் அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆக்ஸ்பாம் அமைப்பு
ஆக்ஸ்பாம் அமைப்பு இந்தியாவின் சமத்துவமின்மை குறித்து அனைத்து மட்டத்தில் இருந்து ஆய்வு செய்து இந்தியாவுக்காகத் தனி அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையில் ஆக்ஸ்பாம் அமைப்பு Profiting from Pain என்ற தலைப்பில் தனியாக ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
Profiting from Pain அறிக்கை
உலகப் பொருளாதார மன்றத்தின் ஆக்ஸ்பாம் அமைப்பு வெளியிட்ட "Profiting from Pain" அறிக்கையில் உலகப் பணக்காரர்கள் வலி மிகுந்த கொரோனா காலகட்டத்தில் சம்பாதித்த சொத்துக்களைக் கொண்டாடும் விதமாக டாவோஸில் உலகளாவிய பில்லியனர்கள் ஒன்றுகூடினர்.
டாவோஸ்
கொரோனா தொற்றுக்குப் பின்பு முதல் முறையாக உலகப் பணக்காரர்கள் நேருக்கு நேர் இந்தக் கூட்டத்தில் தான் சந்தித்துக்கொண்டனர். கொரோனா காலத்தில் புதிய பணக்காரர்கள் உருவானதோடு, பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு உலகளவில் உயர்ந்தது.
வறுமை ஒழிப்பு
இதற்கிடையில், உலக நாடுகள் பல ஆண்டுகளாகத் தத்தம் நாட்டில் இருக்கும் வறுமையை ஒழிக்கப் பல தசாப்தங்களாகச் செய்ய முயற்சிகள், முன்னேற்றம் இப்போது இந்தக் கொரோனா காலகட்டத்தில் தலைகீழாக மாறியது.
உயிர் வாழ
பணக்காரர்களின் சொத்து மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்ந்த இதே காலகட்டத்தில் தான் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் உயிர் வாழ்வதற்குக் கூடப் போதுமான பணம் இல்லாமல் வறுமையில் வாடியது குறிப்பிடத்தக்கது என Profiting from Pain அறிக்கையில் ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குனர் கேப்ரியேலா புச்சர் கெரிவித்து உள்ளார்.
573 புதிய பில்லியனர்கள்
கொரோனா தொற்று நோய் காலகட்டத்தின் போது ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒருவர் எனச் சுமார் 573 புதிய பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். இதேவேளையில் ஒவ்வொரு 33 மணி நேரத்திற்கும் ஒரு மில்லியன் அதாவது 10 லட்சம் மக்கள் என்ற விகிதத்தில், இந்த ஆண்டு 263 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் விழுவார்கள் என்று ஆக்ஸ்பாம் கணித்துள்ளது.
13.9 சதவீத ஜிடிபி
கொரோனா தொற்று காலகட்டத்தின் முதல் 24 மாதங்களில் பில்லியனர்களின் சொத்து கடந்த 23 ஆண்டுகளின் மொத்த வளர்ச்சியை விட அதிகமாக உயர்ந்துள்ளது. உலகக் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து இப்போது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.9 சதவீதத்திற்குச் சமமாக உள்ளது. இது 2000 ஆம் ஆண்டு அளவான 4.4 சதவிகிதத்தில் இருந்து மூன்று மடங்கு அதிகமாகும்.
ஏழை மக்கள்
இந்த ஆக்ஸ்பாம் அறிக்கையில் இந்தியாவின் 50% ஏழை மக்கள் தான் அதிகப்படியான மறைமுக வரி அதாவது ஜிஎஸ்டி வரியை அதிகம் செலுத்துகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஜிஎஸ்டி வரி வசூல்
இந்த அறிக்கையின்படி மொத்த ஜிஎஸ்டி வரி வசூலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அதாவது 64.3 சதவீத வரி ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கீழ் தட்டில் இருக்கும் 50% மக்களிடமிருந்தும் வருகிறது.
நடுத்தரப் பிரிவில் இருக்கும் 40 சதவீத மக்களிடம் இருந்து மூன்றில் ஒரு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இதே நேரம் 10 சதவீத பணக்காரர்களிடமிருந்து வெறும் 3-4 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே வருகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications