பெங்களூரு: ஸ்டார்டப் நிறுவனமான ஓயோ ஹோட்டல் அன்ட் ஹோம்ஸ் 6 மடங்கு நஷ்டத்தினை கண்டுள்ளது.
இது கடந்த மார்ச் 2019வுடன் முடிவடைந்த ஆண்டில் 2,384.69 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளது.
அதிலும் நான்கு மடங்கு வருவாய் கண்ட போதிலும், இப்படி பலவீனமான நஷ்டத்தினை கண்டுள்ளது. ஆறு வயதான ஸ்டார்டப் நிறுவனமான இது. கடந்த நிதியாண்டில் 6,457 கோடி ரூபாய் இயக்க வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு அறிவிக்கப்பட்ட 1,413 கோடி ரூபாயிலிருந்து நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
செலவினங்கள் அதிகரிப்பு
எனினும் மொத்த செலவினம் ஐந்து மடங்காக உயர்ந்து 9,027.53 கோடி ரூபாயை கண்டுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 1,835.38 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒயோவின் இந்த செலவினங்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் செயல்பாட்டு செலவு என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்க செலவு மட்டும் 6,131.65 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இது முந்தைய ஆண்டில் 1,539 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
ஐபிஓ வெளியிட முடியுமா?
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதமே, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஐபிஓ வெளியிட உள்ளதாக கூறியுள்ளது. ஒரு நிறுவனம் பங்கு சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்பு மூன்று ஆண்டுகளுக்கு லாபத்தை காட்ட வேண்டும். ஆனால் ஓயோ தற்போது இப்படி ஒரு நஷ்டத்தினை கண்டிருப்பது இந்த நிறுவனத்திற்கு கவலையை கூட்டியுள்ளது.
காபி டேவை வாங்குகிறதா?
கடந்த சில நாட்களாக காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவனத்தினை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இரு நிறுவனத்திற்குள்ளும் ஒரு ஒப்பந்தம் போடபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வரும் ஓயோ நிறுவனம், காபி டே நிறுவனத்தை வாங்குவதால் இன்னும் தொழிலில் ஆழமாக செல்ல வசதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
வணிக மதிப்பு
இந்த நிலையில் இது வரை பல நாடுகளில் தனது கிளையை மிகப் பரவலாக பரப்பி வரும் நிலையில், இந்தியாவில் இது மேம்படுத்த வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சீனாவில் ஓயோ வணிகத்தின் மதிப்பு 991 மில்லியன் டாலராக கருதப்படுகிறது. இதே ஜப்பானில் 256.7 மில்லியன் டாலராகவும், இது தவிர சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், லண்டன் உள்ளிட்ட நாடுகளில் 1.21 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகத்திலும் ஈடுபட்டு வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications