ஜப்பான் Softbank முதலீட்டில் இயங்கும் உலகளாவிய ஹோட்டல் மற்றும் ரூம் புக்கிங் சேவை நிறுவனமான OYO, தனது IPO திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க டாலர் பத்திரங்களின் விற்பனை மூலம் 450 மில்லியன் டாலர் நிதி திரட்டும் திட்டமே கருதப்படுகிறது.
இதன் மூலம் OYO நிறுவனம் ஐபிஓ வெளியிடுவதற்காகச் செபி அமைப்பிடம் கொடுத்திருந்த DRHP அறிக்கையைத் திரும்பப் பெற்றுள்ளது. புதிய நிதியை திரட்டல் பணிகள் முடிக்கப்பட்டு தனது, நிதியியல் ஆதாரங்களை வலிமைப்படுத்திய பின்பு, நிதி விபரங்களைப் புதுப்பித்து அதன் பின்பு செபியிடம் DRHP அறிக்கையை வெளியிட உள்ளது.

இதன் மூலம் OYO அதிகாரப்பூர்வமாக ஐபிஓ ரேசில் இருந்து வெளியேறியுள்ளது. இந்திய ஸ்டார்ட்அப் துறையினர் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்தனர், இது மட்டும் அல்லாமல் OYO நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஜப்பான் சாப்ட்பேங்க் உட்படப் பல தரப்பினர் இந்த ஐபிஓ-வில் பங்குகளை விற்பனை செய்து ஐபிஓ வெளியிடத் தயாராக இருந்தனர்.
ஜே.பி. மோர்கன் நிறுவனம் இந்த கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கான முதன்மை வங்கியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாலர் பத்திரங்களின் விற்பனை மூலம் ஆண்டுக்கு 9 முதல் 10 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் நிதி திரட்டப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
OYO நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒராவெல் ஸ்டேஸ், கடன் பத்திர விற்பனை முடிந்த பிறகு, புதுப்பிக்கப்பட்ட DRHP ஐ மீண்டும் செபி இடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. OYO நிறுவனம் இதற்கு முன்னதாக, நிறுவனம் தனது $660 மில்லியன் கடனில் 30 சதவீதத்தை ரூ.1620 கோடி மதிப்புக்குத் திரும்ப வாங்கி கடனை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது கவனிக்க வேண்டிய ஒன்று.
இந்த கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை OYO வின் நிதி அறிக்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். இது கட்டாயம் செபியிடம் தாக்கல் செய்யப்படும் புதிய DRHP அறிக்கையில் எதிரொலிக்கும், அதேபோல் பங்கு மதிப்பு, நிறுவனத்தின் மதிப்பு ஆகிய கணக்கீடுகளிலும் எதிரொலிக்கும்.
செப்டம்பர் 2021 இல், ஓYO நிறுவனம் ரூ.8430 கோடி மதிப்பிலான ஐபிஓ ஆவணங்களை செபி இடம் தாக்கல் செய்திருந்தது. அப்போதைய சந்தை நிலவரம் சீரற்றதாக இருந்த காரணத்தால், ஐபிஓ வெளியிடுவது தாமதமானது.
மேலும், OYO நிறுவனம் முதலில் இலக்கு வைத்திருந்த 11 பில்லியன் டாலர் மதிப்பீட்டை விட குறைவான 4-6 பில்லியன் டாலர் மதிப்பீட்டிலேயே பங்கு வெளியீட்டுக்குச் செல்ல தயாராக இருந்தது. ஆனால் தற்போது கூடுதல் கடன் வாங்கும் காரணத்தால் இந்த மதிப்பீடுகளில் கூடுதல் மாற்றம் இருக்க வாய்ப்புகள் அதிகம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications