OYO ரூம்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான 30 வயதான ரித்தேஷ் அகர்வால், அண்மையில் அபுதாபியில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோயிலுக்குச் சென்று, தனது முதல் திருமண நாளை மனைவி கீதன்ஷா சூட் மற்றும் மகன் ஆர்யனுடன் கொண்டாடினார். சமூக ஊடகங்களில் படங்கள் மற்றும் யூடியூப் வீடியோவையும் ரித்தேஷ் அகர்வால் பகிர்ந்துள்ளளார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்படும் போதும் ரித்தேஷ் அகர்வால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நிலையில், திறப்பு விழாவின் போது கோயிலுக்கு சென்ற புகைப்படம் பதிவிட்டார். இந்த நிலையில் தற்போது அபுதாபியில் புதிதாக திறக்கப்பட்ட BAPS கோவிலுக்கு சென்றுள்ளார்.

ஹாஸ்பிட்டாபிலிட்டி நிறுவனமான ஓயோ வெற்றிகரமான பயணத்தில் பல சர்ச்சைகளுடன் போராடுகிறது.
ஏறக்குறைய ரூ.15,000 கோடி சொத்து மதிப்பு கொண்ட ரித்தேஷ் அகர்வால் எக்ஸ் தளத்தில், ஜெய் சுவாமிநாராயண்.
எனது முதல் திருமண நாளை அபுதாபியில் உள்ள பாப்ஸ் சுவாமிநாராயண் கோயிலில் எனது அன்பான மனைவி கீத் மற்றும் எங்கள் மகன் ஆரியனுடன் கொண்டாடினோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரித்தேஷ் அகர்வால் கடந்த ஆண்டில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு புனிதத் தலங்கள் மற்றும் கோயில்களுக்குச் சென்று ஆன்முகத் துறையில் தனது ஆழ்ந்த தொடர்பை வெளிப்படுத்தினார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் ஜென்ம பூமியில் பால ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தபோது அதைப் பற்றி கேள்விப்பட்டதாகவும், அதனால் தரிசனம் செய்ய முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி சமீபத்தில் பாப்ஸ் சுவாமி நாரயணன் கோயிலை திறந்து வைத்தபோது அதைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டேன். எனவே இங்கேயும் ஒரு தரிசனம் செய்ய முடிவு செய்தேன். இந்த ஆண்டு பூரி முதல் புவனேஸ்வர், அயோத்தி வரை பல புனிதத் தலங்களுக்கும் கோயில்களுக்கும் சென்றிருக்கிறேன்.
ஒவ்வொன்றும் அழகுடனும் பிரமாண்டமாகவும் உள்ளன. இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு வேறு ஒரு சிறந்த இடத்தை என்னால் நினைக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கோயிலை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 14ம் தேதி திறந்து வைத்தார்.
2012 இல் நிறுவப்பட்ட ஓயோ ரூம்ஸ், இந்திய விருந்தோம்பல் சந்தையை கலக்கி, யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்தது. இருந்தாலும், மறைமுகமான குற்றச்சாட்டுகள், கொள்ளையடிக்கும் விலை நிர்ணய உத்திகள் மற்றும் ஆக்கிரமிப்பு வணிக நடைமுறைகள் போன்ற குற்றச்சாட்டுகள் அதன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளன.
ஹோட்டல்களை அச்சுறுத்துவது மற்றும் போட்டி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தேவையற்ற வேலை வாய்ப்புகளை அனுப்புவது போன்ற அறிக்கைகளும் நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் சரிவைத் தூண்டியுள்ளன.
அகர்வால் 2023 இல் கீதன்ஷா சூட்-ஐ மணந்தார். டிசம்பரில் அவர்களுக்கு மகன் பிறந்தார்.
Story Written by: I.jayachandran
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications