இந்தியாவின் மிகப்பெரிய ஹோட்டல் புக்கிங் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான OYO ROOMS நிறுவனர் ரிதேஷ் அகர்வால்-ன் தந்தை ரமேஷ் அகர்வால் வெள்ளிக்கிழமை (மார்ச் 10) கூர்கிராம் பகுதியில் இருக்கும் 20 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார்.
சில நாட்களுக்கு முன்பு தான் ரிதேஷ் அகர்வால்-க்கு இந்தியா முழுவதும் கொண்டாடும் வகையில் ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் தலைவர்களும் சென்று இந்த விழாவை சிறப்பித்தனர்.
இந்த நிலையில் ரிதேஷ் அகர்வால்-ன தந்தையின் மரணம் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிதேஷ் அகர்வால்
ரிதேஷ் அகர்வால்-ன் தந்தை ரமேஷ் அகர்வால் மரணம் குறித்து குருகிராம் கிழக்கு டிசிபி கூறுகையில், வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. "ரமேஷ் அகர்வால் கட்டிடத்தின் 20 வது மாடியில் இருந்து விழுந்ததாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
ரமேஷ் அகர்வால்
ரமேஷ் அகர்வால் தனது வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்தார், அவர் இறக்கும் போது, அவரது மனைவி, மகன் ரித்தேஷ் அகர்வால் மற்றும் மருமகள் மனைவி வீட்டில் தான் இருந்துள்ளனர். ரமேஷ் அகர்வால் தனது மனைவியுடன் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது மகனின் வீடு வேறு இடத்தில் உள்ளதாக தெரிகிறது.
தற்கொலைக் குறிப்பு
மேலும் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை மற்றும் சடலத்தின் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மரணம் குறித்தும், அப்போதைய சூழ்நிலை குறித்து குடும்பத்தினரிடம் இருந்து எந்த புகாரும், சந்தேகமும் இல்லை என்று போலீஸ் அதிகாரி கூறுகின்றனர்.
ரித்தேஷ் அகர்வால் அறிக்கை
தனது தந்தையின் மரணம் குறித்து ரித்தேஷ் அகர்வால் வெளியிட்ட அறிக்கையில், இந்த துயரமான நேரத்தில் எங்களுடைய ப்ரைவசியை அனைவரும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குடும்பத்தின் வழிகாட்டும் ஒளி மற்றும் வலிமையாக இருந்த என் தந்தை ஸ்ரீ ரமேஷ் அகர்வால் மார்ச் 10 அன்று காலமானார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்ளகிறன்.
மனமுருகிய ரித்தேஷ் அகர்வால்
அவர் முழு வாழ்க்கையை வாழ்ந்தார், ஒவ்வொரு நாளும் என்னையும் ஊக்கப்படுத்தினார். அவரது மறைவு எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். எனது தந்தையின் பரிவும் அரவணைப்பும் எங்களின் கடினமான காலங்களில் உறுதுணையாக இருந்தது என்று மனமுருகி ரித்தேஷ் அகர்வால் தனது வார்த்தைகளை கோர்த்துள்ளார்.
ரித்தேஷ் அகர்வால் - கீதன்ஷா சூட்
ஓயோ நிறுவனத்தின் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் 2 நாட்களுக்கு முன்பு கீதன்ஷா சூட் என்பவரை மனந்தார். கீதன்ஷா சூட் Farmation Ventures Private Limited நிறுவனத்தின் இயங்குநர்களில் ஒருவர் ஆவார். இவர் உத்திரபிரதேச, லக்னோவில் பிறந்து வளர்ந்தவர். இந்நிறுவனம் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு அரசு சாரா நிறுவனமாகும் (Non-Government Company) இந்நிறுவனத்தை 2020 இல் கீதன்ஷா சூட் மற்றும் குஹூக் சூட் இணைந்து உருவாக்கி உள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications