ஓயோ நிறுவனத்தின் தலைவர் ரித்தேஷ் அகர்வால் Farmation Ventures Private Limited நிறுவனத்தின் இயக்குநரான கீதன்ஷா சூட் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
Softbank குழுமத்தின் நிறுவனர் மசயோஷி சன் (Masayoshi Son) OYO நிறுவனத் தலைவர் ரித்தேஷ் அகர்வால் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்தியாவின் முக்கிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைவர்களையும் இந்த கூட்டத்தில் சந்தித்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவின் இளம் பில்லியனர்களில் ஒருவரான ரித்தேஷ் அகர்வால் இந்திய வர்த்தக சந்தையில் பலராலும் பாராட்டப்படும் வேளையில், இவருடைய திருமணத்திற்கு பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கூடியதால், மாபெரும் வர்த்தக கூட்டமாகவே மாறியது.
ரித்தேஷ் அகர்வால் திருமணம் செய்துள்ள கீதன்ஷா சூட் யார்..?
யார் இந்த கீதன்ஷா சூட்!
ஓயோ நிறுவனத்தின் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் மனைவியான கீதன்ஷா சூட் Farmation Ventures Private Limited நிறுவனத்தின் இயங்குநர்களில் ஒருவராவார். இவர் உத்திரபிரதேச, லக்னோவில் பிறந்து வளர்ந்தவர். இந்நிறுவனம் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு அரசு சாரா நிறுவனமாகும் (Non-Government Company)
இந்நிறுவனத்தை 2020 இல் கீதன்ஷா சூட் மற்றும் குஹூக் சூட் இணைந்து உருவாக்கி உள்ளனர்.
OYO நிறுவனர்!
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய ஓயோ நிறுவனத்தின் தலைவரான ரித்தேஷ் அகர்வால் அவரின் 17 வயதில் OYO ஹோட்டல் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
2011 ஆம் ஆண்டு Oravel stays என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், 2013 ஆம் ஆண்டு OYO Hotels & Homes என்ற பெயரில் மறுசீரமைக்கப்பட்டது.
மசயோஷி சன் வருகை
ரித்தேஷ் அகர்வால் மற்றும் கீதன்ஷா சூட் திருமணத்திற்கு பல ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வந்தாலும், ஜப்பான் சாப்ட்பேங்க் தலைவர் மசயோஷி சன் நேரில் வந்ததும், அவரின் காலில் விழுந்து ரித்தேஷ் அகர்வால் மற்றும் கீதன்ஷா சூட் ஆசீர்வாதம் பெற்றதும் தான் ஹாட் டாப்பி-க் ஆக விளங்குகிறது. ரித்தேஷ் அகர்வாலுக்கும் சாப்ட் பேங்க் குழுமத்தின் தலைவருக்கும் என்ன சம்பந்தம்!
சாப்ட்பேங்க் தொடர்பு
OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் நிறுவனத்தை உலக அளவில் விரிவுபடுத்த சாப்ட்பேங்கிடமிருந்து 2019 ஆண்டு 1 பில்லியன் டாலர் நிதியை முதலீடாகப் பெற்றார். தக்க சமயத்தில் ஓயோவின் வளர்ச்சிக்கு நிதியுதவி அளித்ததில் சாப்ட் பேங்க்கிற்கு பங்கு உள்ளது.
ரித்தேஷ்-ன் Mentor
அதன் நட்பு காரணமாகவும், ரித்தேஷ் அவர்களின் Mentor என்ற முறையிலும் சாப்ட்பேங்க் குழுமத்தின் நிறுவனர் மசயோஷி சன் ரித்தேஷ் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
யார் இந்த மசயோஷி சன்!
ஜப்பானில் பிறந்த மசயோஷி சன் அமெரிக்காவில் பள்ளி கல்வியை பயின்றார். அதன்பின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்.
அங்கு அவர் பல வணிகங்களைத் தொடங்கினார், மேலும் 20 வயதில் தனது தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்தி ஷார்ப் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்திற்கு 1 மில்லியன் டாலருக்கு பொருட்களை விற்பனை செய்து பெரும் சாதனையை படைத்தார்.
ஜப்பான் பயணம்
மசயோஷி சன் அமெரிக்காவில் இருந்து 1981 இல் மீண்டும் ஜப்பான் திரும்பினார் மற்றும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, சாப்ட்பேங்க் நிறுவனத்தை தொடங்கினார்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சாப்ட்பேங்க நிறுவனர் மசயோஷி சன், அவர் நிறுவனத்தை தொங்கிய ஆரம்ப காலத்தில் அவர் அலுவலகத்தில் இரண்டு நபர்கள் மட்டுமே வேலைக்கு இருந்தனர் என்றும், ஆனால் அவர்களும் பகுதிநேர பணியாளர்கள்தான் என்றும் கூறியுள்ளார்.
12,000 ஊழியர்கள்
1981 ஆம் ஆண்டு. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு பணியாளர்களிலிருந்து இன்று 12,000 அதிகமாக பணியாளர்களுடன் 200 டீலர் அவுட்லெட்டுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்து வருவதாகவும் கூறினார்.
சொத்து மதிப்பு
1990 களில் சாப்ட்வேர் விநியோகம், புத்தகம் மற்றும் பத்திரிகை வெளியீடு, டெலிபோன் குறைந்த செலவில் ரூட்டிங், சிஸ்டம் ஒருங்கிணைப்பு, நெட்வொர்க் கம்ப்யூட்டிங் மற்றும் CAD-CAM மற்றும் மென்பொருளை விநியோகம் செய்து சுமார் 350 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சாப்ட்பேங்க் முதலீடுகள்!
சாப்ட்பேங்க் மசயோஷி சன் தலைமையில் சீனாவின் அலிபாபா, பல்வேறு அரபு முதலீட்டு நிறுவனங்கள் இணைத்து 100 பில்லயன் டாலருக்கும் அதிகமான தொகையை உலகம் முழுவதும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து பெரும் டிஜிட்டல் வளர்ச்சிக்கு வித்திட்டார்.
இந்திய முதலீடுகள்
சாப்ட்பேங்க் நிறுவனம் இந்தியாவில் Paytm, PolicyBazaar, Delhivery, Swiggy, Meesho, OYO, FirstCry, OfBusiness மற்றும் Unacademy போன்ற இந்திய நிறுவனங்களிலும் முதலீடுகளைக் கொண்டுள்ளது. மொத்தத்தில், சாப்ட்பேங்க் இந்திய நிறுவனங்களில் இதுவரை சுமார் 15 பில்லியன் டாலர் முதலீடுகளை செய்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications