இந்தியாவின் ஓயோ ஹோட்டல்கள், அமெரிக்காவின் ஐகானிக் பட்ஜெட் ஹோட்டல் பிராண்டுகளான மோட்டல் 6 மற்றும் ஸ்டுடியோ 6-இன் தாய் நிறுவனமான G6 ஹாஸ்பிடாலிட்டியை கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக, பிளாக்ஸ்டோன் ரியல் எஸ்டேட்டிற்கு $525 மில்லியன் பணம் செலுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது. ஓயோவின் இந்த கையகப்படுத்துதல், அமெரிக்காவில் அதன் சர்வதேச இருப்பை வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019-ஆம் ஆண்டில் ஓயோ அறிமுகமானதிலிருந்து, 35 மாநிலங்களில் 320-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை நிறுவியுள்ளது. இந்த கையகப்படுத்துதல், 2024-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில், வழக்கமான ஒப்புதல்களுக்குப் பிறகு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OYO-வின் வளர்ச்சி: இந்த கையகப்படுத்துதலின் மூலம், மோட்டல் 6 மற்றும் ஸ்டுடியோ 6 பிராண்டுகளின் வளர்ச்சியை அதிகரிக்க ஓயோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில் மட்டும், ஓயோ தனது US போர்ட்ஃபோலியோவில் கிட்டத்தட்ட 100 ஹோட்டல்களைச் சேர்த்துள்ளது மற்றும் 2024-ஆம் ஆண்டில் தோராயமாக 250 ஹோட்டல்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
ஓயோ இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரியான கௌதம் ஸ்வரூப் கூறுகையில், "இந்த கையகப்படுத்தல் எங்களைப் போன்ற ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு எங்கள் சர்வதேச இருப்பை வலுப்படுத்த ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். மோட்டல் 6-இன் பிராண்ட் அங்கீகாரம் மற்றும் விரிவான அமெரிக்க நெட்வொர்க்.. நிலையான வளர்ச்சி பாதையை வகுக்க உதவும்" என்று கூறியுள்ளார்.
பிளாக்ஸ்டோனின் உரிமையின் கீழ் உள்ள, G6 ஹாஸ்பிடாலிட்டி அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் சுமார் 1,500 ஹோட்டல்களை கொண்ட ஒரு நிறுவனமாக உள்ளது. மோட்டல் 6-இன் செயல்திறனை மேம்படுத்த பிளாக்ஸ்டோன் பெருமளவில் முதலீடு செய்தது.
G6 ஹாஸ்பிடாலிட்டியின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலி ஆரோஸ்மித், OYO உடனான கூட்டணி குறித்து தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். OYO-வின் புதுமையான விருந்தோம்பல் அணுகுமுறை, எங்கள் சலுகைகளை மேம்படுத்த உதவும். அதோடு வாடிக்கையாளர்களிடம் மோட்டல் 6 பிராண்டைக் கொண்டுச் செல்ல உதவும் என்று கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் பிளாக்ஸ்டோனுக்கு லாபகரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராப் ஹார்ப்பர், இந்த ஒப்பந்தத்தை முதலீட்டாளர்களின் சிறந்த முடிவு என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஓயோ ஹோட்டல்களின் மோட்டல் 6-ஐ கையகப்படுத்துதல் என்பது, ஒயோ நிறுவனத்தின் உலகளாவிய வளர்ச்சியில் ஒரு முக்கியமான படியாகும். இந்த ஒப்பந்தம், ஓயோவின் அமெரிக்காவில் உள்ள இருப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications