இந்தியாவின் உருவான பன்னாட்டு ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் சேவை வழங்கும் OYO ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனரான ரித்தேஷ் அகர்வால் தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் துவங்குகிறார். இந்தியாவின் இளம் ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் இந்தியாவின் இளம் பில்லியனர் எனப் பெருமைக்குச் சொந்தக்காரரான ரித்தேஷ் அகர்வால் புதிய வர்த்தகத் துறையில் இறங்குகிறார்.
ரித்தேஷ் அகர்வால் ஹோட்டல் புக்கிங் மற்றும் அதைச் சார்ந்த துறையிலேயே பல விதமான வர்த்தகத்தையும், சேவைகளையும் இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் OYO நிறுவனத்தின் வாயிலாக அளித்து வருகிறார். இந்த நிலையில் விருந்தோம்பல் துறையிலிருந்து இப்போது மருத்துவச் சேவை துறைக்குள் நுழைகிறார். அதாவது Hospitality டூ Hospitals-க்கு செல்ல உள்ளார்.

ரித்தேஷ் அகர்வால் ஒடிசாவில் அடுத்த ஓராண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக ஐந்து சுகாதார மையங்களை நிறுவுவதாக அறிவித்துள்ளார். இந்தச் சுகாதார மையங்களை ஹெல்த்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான லாஸ்ட் மைல் கேர் மூலம் இயக்கப்படும் என்று OYO நிறுவனம் கூறியது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கும், ஒதுக்கப்பட்ட மக்களுக்கும், மருத்து சேவைகளைப் பெற முடியாத மக்களின் வாழ்க்கையைப் பெரிய அளவில் பாதிக்கும் சுகாதாரப் பிரச்சனைகளைத் தனது சேவைகளின் மூலம் அவர்களுக்கான சுகாதார இடைவெளியைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதை நோக்கமாக இந்தச் சுகாதார மையங்கள் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் வளர்ந்து வரும் சுகாதாரத் துறையில், ஹெல்த்கேர் சேவை வழங்குநர்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிக முக்கியமானது. இதைச் சாத்தியப்படுத்தவும், மருத்துவச் சேவைகள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக முயற்சியில் முதலீடு செய்ய உள்ளதாக ரித்தேஷ் அகர்வால் தெரிவித்தார்.
லாஸ்ட் மைல் கேர் நிறுவனம் ஏற்கனவே இந்தியா முழுவதும் இதுபோன்ற 13 சுகாதார மையங்களை இயக்குகிறது. ஒடிசாவில் இந்நிறுவனம் தாண்டிபூர் கிராமத்தில் ஒரு மையத்தை மட்டுமே வைத்து இயக்குகிறது. OYO நிறுவனர் முயற்சியின் ஒரு முதல் சுகாதார மையம் அவரது சொந்த ஊரான ராயகடாவில் திறக்கப்படுகிறது.
இந்தச் சுகாதார மையங்கள், முதல் மூன்று மாதங்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளையும், முதல் ஆறு மாதங்களுக்குத் தள்ளுபடி சிகிச்சை மற்றும் மருந்துகளையும் வழங்க உள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications