பெங்களூரு: ஆரம்பத்தில் இந்திய ஸ்டார்ட் அப்புகள் அத்தனையும் திரும்பி பார்க்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்ட நிறுவனம் தான் ஓயோ.
விருந்தோம்பல் துறையை சார்ந்த, ஓயோ ஹோட்டல்ஸ் அன்டு ஹோம்ஸ் நிறுவனம், தனது 2018 - 19ம் நிதியாண்டின் நிதி நிலையை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த நிதியாண்டில் 335 மில்லியன் டாலர் நஷ்டத்தினை கண்டுள்ளது என்றும், இது முந்தைய நிதியாண்டில் 44 மில்லியன் டாலர் நஷ்டத்தினை கண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
நஷ்டமாக இருந்தாலும் விரிவாக்கம் செய்வோம்
சாப்ட் பேங்க் குழுமத்தின் ஆதரவான ஒயோ ஹோட்டல் அண்ட் ஹோம்ஸ் லத்தீன், அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து போன்ற சர்வதேச சந்தைகளில் அதன் விரிவாக்கத்தை தொடரும் என்று ஓயோவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் கடந்த நிதியாண்டில் 7 மடங்கு நஷ்டத்தினை கண்ட போதிலும் இந்த நிறுவனம் இப்படியொரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது கவனிக்கதக்கது.
வர்த்தக பங்காளிகள்
இந்த விருந்தோம்பல் நிறுவனமானது கடந்த 2018 - 2019 ஆண்டு நிதியறிக்கையை ஓயோ வாரிய உறுப்பினர் ஆதித்யா கோஷ் விவரித்துள்ளார். எனினும் கோஷ் எப்பொழுது மீண்டும் லாபம் ஈட்ட முடியும் என்று கூறவில்லை. தற்போது 18,000 ஹோட்டல் பங்காளிகளுடன், இந்தியா முழுவதும் 2,70,000 அறைகளின் பட்டியலைக் கொண்டுள்ளது ஓயோ.
வருவாய் அதிகரிப்பு
பெங்களூரை தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான ஓயோ நிறுவனம் கடந்த 2019ம் நிதியாண்டில் 951 மில்லியன் டாலர் ஒருங்கிணைந்த வருவாயை கண்டது. இது முந்தைய 2018ம் நிதியாண்டில் 211 மில்லியன் டாலர் வருவாயை கண்டிருந்தது. இது கடந்த நிதியாண்டில் 605 மில்லியன் டாலர் இந்திய நடவடிக்கைகளில் இருந்து வருவாயை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எத்தனை பயனர்கள்
இதே வெளிநாடுகளில் தனது சேவையில் 348 மில்லியன் டாலர் பங்கினை முதன்மையான பங்கினை சீனா வாங்கியுள்ளது. ஓயோ நிறுவனம் பிரான்சைசி (franchise model) மாதிரியில் இயங்குகிறது. இதன் படி ஒரு சொத்தை எடுத்துக் கொள்கிறது. அதன் மூலம் ஓயோ தனது பிராண்டிங்கை பயன்படுத்தி, அதன் மூலம் தனிப்பட்ட அறைகளை பயனர்களுக்கு விற்கிறது. இது கடந்த ஜனவரி - டிசம்பர் 2019க்கு இடையிலான காலத்தில் மட்டும் 180 மில்லியன் பயனர்களை கண்டதாக கூறப்படுகிறது.
மற்ற நாடுகளில் எப்படி?
இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் மொத்தம் 43,000 ஹோட்டல் கூட்டாளர்களுடன், ஒரு மில்லியன் அறைகளும் உள்ளதாக தெரிவித்துள்ளது. தெற்காசியாவின் 300 நகரங்களில் 99,000 அறைகளும், இதே மேற்கு ஆசியாவில் 17,000 அறைகள், ஜப்பானில் 12,000 அறைகளும், லத்தீன் அமெரிக்காவில் 16,000 அறைகளும் உள்ளதாக ஓயோ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நஷ்டம் குறைவு
வளர்ச்சி மற்றும் முதலீட்டு முறையில் இருந்த சீனா உள்ளிட்ட பல சர்வதேச சந்தைகள், கடந்த நிதியாண்டில் 75% இழப்புகளை கண்டுள்ளதாக ஓயோ தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் நிதியாண்டில் நிகர இழப்பு 35% ஆக அதிகரித்துள்ளது. இதே 2018ல் 25% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஒயோ கடந்த 2019ம் நிதியாண்டில் அதன் இழப்பு 14% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 24% ஆக இருந்தது.
கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள்
ஓயோவில் கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் வெளியேறுவதாக கூறப்பட்ட நிலையில், சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே வெளியேறியதாக அந்த நிறுவனம் அண்மையில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2019ம் நிதியாண்டில் கார்ப்பரேட் வணிகம் 80% வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் தற்போது சுமார் 7,500 வாடிக்கையாளர்களை ஓயோ கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 4,000 புதிய கார்ப்பரேட் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளோம் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications