16 லட்சம் ரூபாய் வழக்கு 160 கோடி ரூபாயாக மாறியது.. OYO-க்கு பெரும் பிரச்சனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஹோட்டல் புக்கிங் சேவை நிறுவனமான OYO-வின் கிளை நிறுவனமான OYO ஹோட்டல்ஸ் அண்ட் ஹோம்ஸ் நிறுவனத்திற்குச் செயல்பாட்டுக் கடன் வழங்கும் நிறுவனம் அதாவது கடன் அடிப்படையில் சேவை அளிக்கும் நிறுவனம் ஒன்று 16 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை அளிக்கவில்லை என இந்நிறுவனம் மீது கடந்த மாதம் வழக்குத் தொடுத்துள்ளது.

 

இந்த வழக்கை விசாரித்த NCLT நீதிமன்றம் மார்ச் 30ஆம் தேதி விசாரணை செய்து ஏப்ரல் 4ஆம் தேதி OYO ஹோட்டல்ஸ் அண்ட் ஹோம்ஸ் நிறுவனம் மீது நொடித்துப்போன நிறுவனத்திற்குத் தீர்மானம் எடுக்க உத்தரவிட்டது.

அதல பாதாளம் நோக்கி செல்லும் ரூபாய்.. மீண்டும் ரூ.74.87 ஆக வீழ்ச்சி..!

இதனால் OYO நிறுவனம் திவால் ஆனதாக சமுக வளைத்தளத்தில் செய்திகள் பரவிய நிலையில், NCLT நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு உடனடியாக OYO நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆனால் தற்போது இது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.

 16 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை

16 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை

OYO நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்ட 16 லட்சம் ரூபாய் அளவிலான நிலுவை வழக்கைத் தொடர்ந்து இந்நிறுவனத்திற்குக் கடன் அடிப்படையில் சேவை அளிக்கப் பலர் ஹோட்டல் நிறுவனங்கள் சுமார் 160 கோடி ரூபாய் அளவிலான நிலுவைத் தொகைக்கு வழக்குத் தொடுத்துள்ளனர். இதனால் OYO நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் NCLT நொடித்துப்போன நிறுவனத்திற்குத் தீர்மானம் எடுக்க உத்தரவிட்டதற்குத் தடை பெற முடியாத நிலையில் சிக்கியுள்ளது.

 NCLT வழக்கு

NCLT வழக்கு

மார்ச் 30ஆம் தேதி குருகிராம் பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் நிறுவனர் ராகேஷ் யாதவ் என்பவர் OYO ஹோட்டல்ஸ் அண்ட் ஹோம்ஸ் நிறுவனம் மீது 16 லட்சம் ரூபாய் அளவிலான நிலுவை தொகை அளிக்க வேண்டும் என NCLT வழக்குத் தொடுத்தது மட்டும் அல்லாமல் இந்த நிலுவை தொகையை அளிக்க இடைக்காலத் தீர்வு குழுமை உடனடியாக அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

 160 கோடி ரூபாய் நிலுவைத் தொகை
 

160 கோடி ரூபாய் நிலுவைத் தொகை

இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த நிலையில், OYO ஹோட்டல்ஸ் அண்ட் ஹோம்ஸ் நிறுவனத்திற்கு எதிராகச் சுமார 160 கோடி ரூபாய் அளவிலான நிலுவை தொகைக்கான வழக்குகள் குவிந்துள்ளது NCLT தெரிவித்துள்ளது.

 பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு

பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு

ஆனால் இந்த 160 கோடி ரூபாய் நிலுவை தொகைக்கான ஆதாரங்கள் சரிபார்க்க வேண்டும் என்பதையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராகேஷ்-ன் வழக்கு OYO நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பல ஹோட்டல் உரிமையாளர்களை வழக்குத் தொடுக்கத் தூண்டியுள்ளது.

 OYO நிறுவனத்தின் முயற்சிகள்

OYO நிறுவனத்தின் முயற்சிகள்

இதேவேளையில் NCLT நீதிமன்றம் ஏப்ரல் 4ஆம் தேதி அறிவித்த நொடித்துப்போன நிறுவனத்திற்குத் தீர்மானம் எடுக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இதற்கு இடைக்காலத் தடை பெற OYO தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oyo's non-payment claims raised from 16 lakhs to Rs 160 Cr in NCLT insolvency case

Oyo's non-payment claims raised from 16 lakhs to Rs 160 Cr in NCLT insolvency case
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X