600 ஊழியர்கள் பணிநீக்கம்.. OYO போட்ட குண்டு.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய ஹாஸ்பிடாலிட்டி செயின் நிறுவனமான OYO நாட்டின் பிற முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் போலவே செலவுகளைக் குறைக்க நிறுவனம் மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

OYO நிறுவனம் லாக்டவுன் காலத்திலேயே அதிகப்படியான வர்த்தகத்தை மூடியும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரெசிஷன் தாக்கம் தீவிரம்.. சேர்சாட் நிறுவனத்தில் 5% ஊழியர்கள் பணிநீக்கம்..! ரெசிஷன் தாக்கம் தீவிரம்.. சேர்சாட் நிறுவனத்தில் 5% ஊழியர்கள் பணிநீக்கம்..!

OYO நிறுவனம்

OYO நிறுவனம்

OYO நிறுவனம் இந்தத் தடுமாற்றத்தில் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் ரெசிஷன் பாதிப்பும், பணிநீக்க அறிவிப்புகளும் மக்கள் சுற்றுலா செல்லும் எண்ணிக்கையும், ஹோட்டல் ரூம் புக்கிங் சேவையும் பெரிய அளவில் குறையும், இதை முன் கூட்டியே உணர்ந்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 600 ஊழியர்கள் பணிநீக்கம்

600 ஊழியர்கள் பணிநீக்கம்

OYO நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்நிறுவனத்தில் மொத்த வர்த்தகத்திலும் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளதாகவும், இந்த நிலையில் மொத்த 3700 ஊழியர்கள் தற்போது பணியாற்றும் நிலையில் சுமார் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

டெக் ஊழியர்கள் பணிநீக்கம்

டெக் ஊழியர்கள் பணிநீக்கம்

OYO நிறுவனம் தற்போது ப்ராடெக்ட் & இன்ஜினியரிங் அணிகளில் இருக்கும் ஊழியர்கள், OYO வெக்கேஷன் ஹோம் அணி ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதேபோல் partner relationship management மற்றும் business development அணிகளில் புதிதாக ஊழியர்களைச் சேர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 முக்கியப் பிரிவுகள்

முக்கியப் பிரிவுகள்

இதேபோல் தற்போது பணிநீக்கம் செய்யப்படும் டெக் ஊழியர்களும் OYOYO உருவாக்கி வரும் புதிய வர்த்தகம், முயற்சிகள் ஆகியவற்றில் தான் பணிநீக்கம் செய்ய உள்ளது, உதாரணமாக in-app gaming, social content curation மற்றும் patron facilitated content ஆகியவற்றில் இருந்து தான் அதிகளவிலான டெக் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்க உள்ளது.

முன்னணி பொருளாதார நாடுகள்

முன்னணி பொருளாதார நாடுகள்

அமெரிக்கா மற்றும் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் பணவீக்கம் மற்றும் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தால் செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.

ரெசிஷன் அச்சம்

ரெசிஷன் அச்சம்

இதனால் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ரெசிஷன் அச்சம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் ரெசிஷன் பயம் இல்லை என்ற பல தரப்பினர் கூறி வரும் இதே வேளையில் இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனமான பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

வேலைவாய்ப்பின்மை

வேலைவாய்ப்பின்மை

இதன் எதிரொலியாக இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை நவம்பர் மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 8 சதவீதம் உயர்ந்து 3 மாத உச்சத்தைத் தொட்டு உள்ளது. இப்போ இந்தியாவில் ரெசிஷன் அச்சம் அதிகரித்துள்ளதா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oyo to layoff 600 employees; Most layoff on product and engineering teams

Oyo to layoff 600 employees; Most layoff on product and engineering teams
Story first published: Sunday, December 4, 2022, 9:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X