இந்தியா-வை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த மோடி அரசின் பணமதிப்பிழப்பு அறிவித்து 5 வருடம் முழுமையாக முடிந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டது. மோடி அரசு கொடுத்த மிகப்பெரிய வாக்குறுதிகளின் நிலை என்ன..?
பணமில்லா பொருளாதார
மிஸ்டர் மோடி முதலில் இந்தியாவில் பணமில்லா பொருளாதார (Cashless economy) நாடாக மாற்றுவதாக அறிவித்தார், அதன் பின்பு இது அபத்தமான இலக்கு என்பதை உணர்ந்து குறைவான பணம் கொண்ட பொருளாதார (Less Cashless economy) நாடாக மாற்றுவதாக இலக்கை மாற்றினார்.
பணப்புழக்கம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கும் போது இந்தியாவில் மொத்தம் 18 லட்சம் கோடி ரூபாய் பணப் புழக்கத்தில் இருந்தது, தற்போது 28.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. (அதாவது மக்கள் கைகளில் பணமாக இருக்கும் தொகையின் அளவு.)
5 வருடம்
இந்த 5 வருடத்தில் அதிகப்படியான பணமதிப்பிழப்பு, அதிகப்படியான பணவீக்கம், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வருமானம் குறைந்ததிற்கு நன்றி எனவும். ஒரு வழியாக மோடி சொன்னது போல் Less Cashless economy ஆக இந்தியா உள்ளது என டிவிட்டரில் சிதம்பரம் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்.
கருப்புப் பணம்
மோடி அரசு சொன்னது போல் இந்தியாவில் இன்னமும் கருப்புப் பணம் ஒழிக்கவும் முடியவில்லை, அதேபோல் மக்கள் கைகளில் 5 வருடத்திற்கு முந்தைய அளவிட்டை விடவும் அதிகமாகவே பணம் புழங்கி வருகிறது இதனால் டிஜிட்டல் பொருளாதாரம் திட்டமும் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் பணமதிப்பிழப்பு குறித்து மக்களாகிய உங்களின் கருத்து மிகவும் முக்கியம் என்றால் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications