மோடி அரசின் புத்தாண்டு பரிசுகளை என்ஜாய் பண்ணுங்க.. ப.சிதம்பரம் போட்ட டிவீட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணவீக்கம், வேலையின்மை விகிதம், வங்கி வாராக்கடன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தினை பகிர்ந்துள்ளார் ப சிதம்பரம்.

 

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம், தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையின்மை விகிதம், வாராக்கடன் குறித்து கடுமையாக விளாசியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துகளை பகிர்ந்துள்ள ப சிதம்பரம், மோடி அரசின் ஆண்டு முடிவு (Year end gift) பரிசுகளை என்ஜாய் செய்யுங்கள் என கிண்டல் செய்துள்ளார்.

பணவீக்கம் & வேலையின்மை விகிதம்

பணவீக்கம் & வேலையின்மை விகிதம்

சில்லறை பணவீக்கம் விகிதம் 4.91% ஆகவும், இதே எரிபொருள் (Fuel & Light) பணவீக்கம் 13.4% ஆக உள்ளது. இதே வேலையின்மை விகிதம் 8.53% ஆக உள்ளது. குறிப்பாக நகரப்பகுதிகளில் வேலையின்மை விகிதம் 10.9% ஆக உள்ளதையும் சுட்டி காட்டியுள்ளார்.

வங்கிகளின் ரைட் ஆப்

வங்கிகளின் ரைட் ஆப்

வங்கிகள் 2020 - 21ம் ஆண்டில் 2,02,783 கோடின் ரூபாய் தொகையினை ரைட் ஆப் செய்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் 4,86,800 கோடி ரூபாய் வாராக்கடன் உள்ளது. அதில் 13 கார்ப்பரேட்களின் நிலுவை மட்டும் 2,84,980 கோடி ரூபாயாக உ ள்ளது என சுட்டிக் காட்டியுள்ளார்.

விலை வாசி அதிகரிப்பு
 

விலை வாசி அதிகரிப்பு

கொரோனாவின் வருகைக்கு பிறகு பல லட்சம் பேர் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்தனர். அந்த சமயத்தில் இன்னும் மோசமான சூழலை ஏற்படுத்தும் விதமாக விலை வாசியும் அதிகரித்து வந்தது. இது சப்ளை சங்கிலி, மூலதன பொருட்கள் பற்றாக்குறை , முலதன பொருட்கள் விலையேற்றம் என பல காரணிகளுக்கு மத்தியில் விலைவாசியானது பெரியளவில் அதிகரித்தது.

எரிபொருள் விலை

எரிபொருள் விலை

குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையானது மிக மோசமான அளவில் அதிகரித்தது. இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக எரிபொருட்கள் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சமீபத்திய வாரங்களாக எரிபொருட்கள் விலையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும், முன்னதாக தொடர்ந்து விலை அதிகரித்து வந்தது.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

விலைவாசியானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வேலையின்மை விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நகரப்பகுதிகளில் இந்த விகிதமானது அதிகரித்து வருகின்றது.

இத்தகைய சூழல்களுக்கு மத்தியில் ஓமிக்ரான் அச்சம் எழுந்துள்ளது. இது இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

P Chidambaram says lets enjoy year end gifts of the Modi govt

P Chidambaram says lets enjoy year end gifts of the Modi govt/மோடி அரசின் பரிசுகளை என்ஜாய் பண்ணுங்க.. மோடி அரசை கிண்டல் செய்யும் ப சிதம்பரம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X