சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார ஏற்ற இறக்கத்தின் மத்தியில் கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியா டுடே கூட்டத்தில் இது குறித்து கூறிய ப சிதம்பரம், இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர்.
நாட்டின் வளர்ச்சியினை பொறுத்த வரையில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
கடனை நிர்வகிக்கணும்
2009 - 11ம் கசப்பான அனுபவத்திற்கு பிறகு, நான் கற்றுக் கொண்ட பாடம் மற்றும் நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடம் என்னவென்றால், நம் கடனை நாம் சரியாக நிர்வகிக்க வேண்டும். ஏனெனில் இது அரசாங்க செலவினம், பணவீக்கம் மற்றும் செலவழிக்கும் திறனை பாதிக்கிறது. பற்றாக்குறை மற்றும் கடன் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசாங்கம் கவனம் செலுத்தியதற்காக பெருமைப்படுவேன் என கூறியுள்ளார்.
நிதி பற்றாக்குறை
கடந்த மாதம் அதிக செலவுகள் மற்றும் குறைந்த வருவாய் காரணமாக நிதிப்பற்றாகுறை, ஜனவரி இறுதியில் 67.8% ஆக CGA தரவு சுட்டிக் காட்டுகின்றது.
ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில், நிதி பற்றாக்குறை, செலவு மற்றும் வருவாய் வசூல் ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி 11.9 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக CGA தெரிவித்துள்ளது.
எதிர்பார்ப்பு
அரசாங்கம் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சந்தையில் இருந்து கடன் வாங்குகின்றது. 2021 - 22ம் ஆண்டில் ஒப்பிடக் கூடிய காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறையானது 58.9% ஆக இருந்தது. இதே 2022 - 23ம் ஆண்டு முழுவதும் பற்றாக்குறை 17.55 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% ஆக இருக்கலாம் என்றும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
கடன் திரட்டல்
நிதிப் பற்றாக்குறை என்பது அரசின் மொத்த வருவாய்க்கும், மொத்த செலவினத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும். இப்படி நிலவும் நிதிப் பற்றாக்குறையில் பெரும் பகுதி கடனின் மூலமே சரி செய்யப்படுகின்றது. இவற்றில் சில சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி மற்றும் வெளி நாட்டுக் கடன், பத்திரங்கள் மூலமும் திரட்டப்படுகின்றது.
நிதிப் பற்றாக்குறை கணிப்பு
கடந்த பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2023 - 24ம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறையானது ஜிடிபி-யில் 5.9% ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டது. ஆனால் இது தற்போது 6.4% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியிருப்பினும் 2025 - 26ம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை என்பது 4.5% கீழாக கொண்டு வருவதில் அரசாங்கம் முயற்சி செய்தும் வருகின்றது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications