ப.சிதம்பரம் சொல்வதை பார்த்தீங்களா.. எதிர்க்கட்சிகளே இல்லையாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட நிலையில், இன்று பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் உடன் பட்ஜெட் அறிக்கை தாக்கலுக்காகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் பட்ஜெட் வெளியிடும் நாளான இன்று, தனது டிவிட்டரில் முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

பட்ஜெட் நாளில் நல்ல ஏற்றம் தான்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் என்ன..!பட்ஜெட் நாளில் நல்ல ஏற்றம் தான்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் என்ன..!

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் தனது டிவிட்டரில், பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் இன்று காலை சில செய்தித் தாள்களை பார்த்தால், இந்தியாவில் எதிர்க்கட்சிகளே இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடும்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

மேலும், பலவீனமான எதிர்க்கட்சி இருந்தாலும், அதற்குப் பொருளாதாரம் பற்றிய பார்வை இல்லை என்ற வகையில் சித்தரிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சிறந்த நேரங்கள், மோசமான நேரங்கள்

சிறந்த நேரங்கள், மோசமான நேரங்கள்

அடுத்த டிவீட்டில் ப.சிதம்பரம், சார்லஸ் டிக்கென்ஸ் சொன்னது போல் சிறந்த நேரங்கள், மோசமான நேரங்கள் ஆக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இவருடைய டிவீட்-க்கு பலர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும், வழக்கம் போல் கடுமையான எதிர்ப்பும் உள்ளது.

2009 சர்வதேச நிதிநெருக்கடி

2009 சர்வதேச நிதிநெருக்கடி

ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இதேபோல் சிதம்பரம் அவர்களின் தலைமையில் 2009ல் சர்வதேச நிதிநெருக்கடியில் இந்தியா பெரிய அளவில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தது.

பொருளாதார ஆய்வறிக்கை

பொருளாதார ஆய்வறிக்கை

மத்திய அரசு நேற்று வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2022-23ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8-8.5% வரையில் உயரும் என்று கணித்துள்ளது. இதேபோல் 2021-22ஆம் நிதியாண்டில் ஜிடிபி 9.2% வரையில் உயரும் எனத் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 2021-22ஆம் நிதியாண்டில் விவசாயத் துறை 3.9%, தொழிற்துறை 11.8%, சேவைத் துறை 8.2% வரை வளர்ச்சி அடையும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

P. Chidambaram tweets it was the best of times, it was the worst of times after economic survey

P. Chidambaram tweets it was the best of times, it was the worst of times after economic survey ப.சிதம்பரம் சொல்வதைப் பார்த்தீங்களா.. எதிர்க்கட்சிகளே இல்லையாம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X